இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா
இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா
கூறக்கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று பல்வேறு சந்தர்ப்பங்களில் துஆ செய்துள்ளனர். ஆனால் அந்த துஆவைச் செவியுற்ற நபித்தோழர்களை ஆமீன் சொல்லுமாறு கூறவில்லை. நபித்தோழர்கள் ஆமீன் கூறியதாகவும் அதைக் கேட்டு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அங்கீகரித்த்தாகவும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது பித்அத் ஆகும். இது மார்க்கத்தில் உள்ளது என்றால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள இதைக் கற்றுத்தராமல் இருந்திருக்க மாட்டார்கள். இமாம் மிம்பரில் ஏறிய பின் அவர் கூறுவதை செவி தாழ்த்திக் கேட்பது தான் மக்களின் கடமையாகும்.