இணைகற்பிக்கும் இமாம்! மத்ஹபின் தீர்ப்பு என்ன?

கேள்வி-பதில்: தொழுகை

இணைகற்பிக்கும் இமாம்! மத்ஹபின் தீர்ப்பு என்ன?

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். இதை ஏற்றுக் கொள்ளாத சிலர் இந்தத் தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை நாம் பிளவுபடுத்தி விட்டதாகக் கூறி வருகின்றனர்.

யாரும் கூறாத ஒன்றை நாம் கூறினாலும் ஆதாரத்துடன் தான் கூறியுள்ளோம் என்பதால் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தியதில்லை. இவர்களின் வாதத்தை பொய்யாக்கும் ஒரு பத்வா நம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

உலகில் வாழும் அனைத்து ஹனபி மத்ஹப்காரர்களின் பல்கலைக் கழகமாகக் கருதப்படும் உத்தரபிரதேசத்தில் தேவ்பந்த் நகரில் அமைந்துள்ள தாருல் உலூம் மதரஸாவும் இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று அளித்த பத்வாவே அது.

ஹனபி மத்ஹப்காரர்கள் தங்கள் பள்ளியில் உள்ள இமாம் இணைகற்பித்தால் அவரை உடனே இமாமத் பணியில் இருந்து நீக்கி விட்டு இணைகற்பிக்காத இமாமை நியமிப்பது அவர்களின் கடமையாகும். அதற்கு இயலாவிட்டால் அந்த இமாமைப் பின்பற்றுவதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.