ஆஷூரா நோன்பு பற்றிய பலவீனமான ஹதீஸ்
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
ஆஷூரா நோன்பு பற்றிய பலகீனமான ஹதீஸ்
ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
(அஹ்மத்: 2047), பைஹகீ
இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார்.
இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார்.
மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
முஹர்ரம் 9 & 10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும்.