ஆஷுரா நாளில் குடும்பத்திடம் தாராளமாக நடந்து கொள்
ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.
இது அபூஹுரைரா (ரலி) அவர் களின் அறிவிப்பாக ஷுஅபுல் ஈமான் (ஹதீஸ் எண் 3795), ஜுஸ்உ காஸிம் பின் மூஸா (பக்கம் 17) உள்ளிட்ட இன்னும் சில நூற்களில் பதிவாகி உள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.
இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்றும் பலவீனமானவர் என்றும் இமாம் அபூஹாதம் குறிப்பிட்டுள்ளார்.
இவரது ஹதீஸ்கள் செல்லாததாக ஆகி விட்டன என்று அலீ இப்னுல் மதீனீ விமர்சித்துள்ளார்.
தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 167
இதேபோன்று ஆஷுரா நாளில் குளித்தவருக்கு நோய் ஏற்படாது, கண்ணில் சுருமா தீட்டியவருக்குக் கண்வலி வராது என்ற இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களும் உள்ளன. இவை அனைத்துமே பலவீனமான ஹதீஸ்களாகும்.