ஆவி அடங்கும் வரை மூடி வை!

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

அஸ்மா (ரலி) அவர்களிடம் உணவு கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள் இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உர்வா

நூல் : தாரமீ (1958)

இந்த அறிவிப்பில் குர்ரத் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, நஸாயீ, அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதே செய்தி அஹ்மதில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

25720 حَدَّثَنَا حَسَنٌ قَالَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ حَدَّثَنَا عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ ثُمَّ تَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ عُقَيْلٍ و حَدَّثَنَا عَتَّابٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَنْبَأَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ فَذَكَرَ مِثْلَهُ رواه أحمد

இந்த அறிவிப்பில் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், யஹ்யா பின் சயீத், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, இமாம் இப்னு ஹஜர், இமாம் ஹைஸமீ ஆகியோர் கூறியுள்ளனர்.