ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள் 

காஷ்மீர் மாநில கத்துவா பகுதியை சேர்ந்த சிறுமி ஆசிபா தான் இன்று இந்திய நாட்டு மக்களின் ஒவ்வொரு உள்ளங்களிலும் உறையகூடிய அளவிற்கு உள்ளத்தில் ஊன்றி இருக்கிறார். தானும் தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையும் அதை தாண்டி ஒன்றும் அறியா 8 வயதே கொண்ட சிறுமி ஆசிபா கோவில் பூஜை கருவறையில் காவிகளும் ,காவி சித்தாந்தத்தை கொண்ட இரண்டு காவலர்களும் , உறவினர் என்ற போர்வையில் ஒளிந்து கிடந்த மிருகம் என இந்த பாவிகளால் பெரும் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிலந்திருக்கிறாள். ஆசிபாவை சிதைத்த விதம் மிக கொடூரமானது. மருத்துவ அறிக்கையும் , காவல்துறை அறிக்கையும் அறிந்தால் நம் நரம்பு ரத்த நாளங்களை எல்லாம் உரைய வைக்கும் அளவுக்கு பதற வைக்கிறது.

பாலிதீன் பையை விரித்து , ரத்தம் கோவிலின் தரையில் சிந்தாதவாறு முதலில் விரிப்பை ஏற்படுத்தி கற்பழிக்க தொடங்கியுள்ளார்கள். அவள் கத்தி விட கூடாது என தொடர்ந்து போதை மருந்தை கொடுத்து மயங்க வைத்திருக்கிறார்கள்.. ஒருவேளை மயக்கம் தெளிந்தாலும் எழுந்து செல்ல கூடாது என கால்களை வளைத்து உடைத்து இருக்கிறார்கள். அதே நிலையில் வைத்தே கடைசி வரை சிதைக்கப்பட்டு இருக்கிரால் அந்த சின்னஞ்சிறு பிஞ்சு.

மரணத்தை கூட வழியில்லாமல் கொடுக்க கூடாது என முதலில் கழுத்தை நெறித்துள்ளார்கள். அப்போதும் ஒரு வேலை மூச்சி இருந்தால் என எண்ணி பின் பக்கமாய் முட்டு கொடுத்து நெஞ்சு எலும்பை உடைத்து இருக்கிறார்கள். அப்போதும் அவள் உயிர் நூலிலையில் ஆடிக்கொண்டு இருக்க இறுதியாக கற்களை எடுத்து மண்டையில் அடித்து தலை எலும்புகளை உடைத்து அவள் மூச்சை நிறுத்தியுள்ளார்கள்.நாம் இந்த கொடுரத்தை நிகழ்த்துவது ஓர் எட்டு வயது சிறுமி என்பதனை கூட அறியாமல் தங்களது ஈன செயல்களை அந்த சிறு பிஞ்சின் மீது கான்பிதுள்ளர்கள். சிறுமி ஆசிபா விற்கு நிகழ்ந்த இந்த வன்கொடுமை உலகம் முழுதும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு வலுவான கண்டன குரல்களும் எழுந்தது.

அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல பகுதிகளில் இருந்தும் கண்டன குரல்கள் ஆங்காங்கே வெடிக்க தொடங்கியது. கண்டனங்கள் எல்லாம் ஆளும் மத்திய அரசின் செவிகளுக்கு எட்டியதா என்று எண்ணி பார்த்தால் ஆரம்பத்தில் சிறு கண்டங்களை கூட வெளியிடாமல், அமைதி காப்போம் இல்லையில் அடுத்த ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு நாம் வழக்கம் போல் திசை திருப்பும் முயற்சியை கைய்யிலே எடுப்போமா என எண்ணியதை போல தங்களின் செயல்களை அமைத்து கொண்டனர். கண் துடைப்பிற்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டு அடுத்து அசிமானந்தாவின் நீதிமன்ற தீர்ப்பை வெளியிட்டு திசை திருப்ப முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. இந்த மனிததன்மையற்ற செயலை செய்ததோடு இந்த செயலை செய்தவர்களை காக்கும் முயற்சியில் இறங்கிய பாஜகவின் முயற்சியோ இந்திய மக்களுக்கு இவர்கள் யார் என்பதை அடையாளம் அறியவே ஓர் வாய்ப்பாக அமைந்தது.

சிறு பிஞ்சின் உடலை சிதைத்து வன்புணர்வில் ஈடுபட்டு கொலை செய்த மிருகங்களை தூக்குமேடையில் ஏற்றி மரண தண்டனை விதிக்காமல் அவர்களை கைது செய்ய கூடாது என குரல் எழுப்பி கொண்டு நீதி கேட்டனர் பாஜகவினர். இவர்கள் உண்மையில் மனிதர்கள் தானா? இவர்களது வீட்டு பிள்ளைகளையோ உறவினர்களையோ இவ்வாறான நிலை ஏற்பட்டால் இவ்வாறு தான் கைது செய்ய கூடாது என குரல் கொடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் ஒரு புறம் சாட்டையை சுழட்ட , தங்களை காவி தலைவன் என்று பிதற்றும் எச்சைகளும் ஏளனம் செய்யும் நிகழ்வோ, கோப கொந்தளிப்பில் இருந்தவர்களை இன்னும் கோபமடைய செய்தது.

தனது முகநூளில் தான் போடும் பதிவுகளையே சரி வர கண்காணிக்க இயலாத (அட்மின் பதிவு) என்று சொல்லி ஓட்டமெடுக்கும் ஹெச். ராஜா சிறுமி ஆசிபா வன்கொடுமை செய்யப்பட்ட அந்த கோவிலின் அறையில் கதவே இல்லை என கருத்து சொல்லி இந்த ஈன செயல்களை தட்டி கேட்க துணிவின்றி எக்காலமிட்டார். கருத்து சொன்ன ஒரே நாளில் இவரின் பொய்களை தோலுரித்து காட்டும் வண்ணம்”INDIA TODAY” என்ற வடநாட்டு செய்தி ஊடகம் நேரடியாக அந்த கோவிலுக்கு சென்று அந்த அறையை வீடியோ எடுத்து அந்த அறையில் கதவு இருந்ததையும், கதவில் பூட்டு தொங்கியதையும் வெளியிட்டு ஹெச். ராஜாவின் முகத்திரையை கிழித்துள்ளது.

ஆக மொத்தம் கோவில் அறையில் கதவு இருந்ததோ இல்லையோ பாஜகவினர்களுக்கு மூளையே இல்லை என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நிருபனமாக்கபட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாத்தின் ஆர்பாட்ட அறிவிப்பும் – ஆர்பரிக்கும் மக்களும்! ஆசிபாவிர்க்கு நிகழ்த்த இந்த கொடுஞ்செயலை கண்டிக்கும் விதமும் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட காவி காட்டுமிராண்டிகளை உடனடியாக தூக்குமேடயிலேற்றி தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைநகரில் ஆர்பாட்டத்தை அறிவித்து பிற மாவட்டங்களில் ஆர்பாட்டத்தை நடத்துமாறு அறிக்கை வெளியிடப்பட்டது. தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 16/04/18 அன்று நடைபெற்றது.

அலை அலையை மக்கள் வெள்ளம் அநியாயத்திற்கு எதிராக அணிதிரண்டனர். கை குழந்தையோடு தாய்மார்களும் சிறுவர் சிறுமிகள் என சீறி பாய்ந்தது கண்டன கோஷங்கள்..”நீதி வேண்டும் நீதி வேண்டும் ஆசிபாவுக்கு நீதி வேண்டும் இந்தியாவின் மகளுக்காக நீதி வேண்டும் நீதி வேண்டும்” “சுட்டு தள்ளு சுட்டு தள்ளு பச்சிளம் குழந்தையை சீரழித்த காவி நாய்களை சுட்டு தள்ளு” – என்பன கண்டன கோஷங்கள் கோப அனல்களை கொப்பளிக்க வைத்தது. கண்டன கோசத்தின் நிறைவுக்கு பிறகு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுசெயலாளர் சகோ. செய்யது இப்ராஹீம் கண்டன உரை நிகழ்த்தினார், ஆஷிபாவுக்கு நடந்தது என்ன என்பதை வெளிப்படுத்தி கண்டிக்க மறந்த மறுத்த அரசை மக்களிடத்தில் தோலுரித்து காட்டினார். பாஜகவினர் அடி மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை என்ன நிலை என்பதை அவர்களின் சதிகளை அம்பலபடுத்தினார்.

தங்களின் கோப அலைகளை வெளிகாட்ட தவ்ஹீத் ஜமாத்தின் ஆர்பாட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அணி திரண்டு ஆர்பரித்தனர். இஸ்லாமியர்களை தாண்டி பிற கொள்கை சகோதர சகோதரிகளும் கலந்துகொண்டனர் . அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்! உணர்வுகளை வெளிபடுத்திய தமிழக ஊடகம்! சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செய்தி ஊடகங்கள், இனைய ஊடகங்கள் என அணிதிரண்டனர். சில செய்தி ஊடகங்கள் நேரலையிலே ஆர்பாட்டத்தை ஒளிபரப்பினர்.. தொடரும் தமிழகம் முழுதும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்! காஷ்மீரிய சிறுமி ஆஷிபாவை கோவில் அறையில் கற்பழித்த காட்டுமிராண்டிகளை தூக்கிலேற்ற வலியுறுத்தி தலைநகரை தொடர்ந்து கடலூர்(வடக்கு), கோவை மாநகர் , சேலம், திருவாரூர், திண்டுக்கல், நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு, தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அதை தொடர்ந்து திருப்பூர், காரைக்கால், கிருஷ்ணகிரி ,திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, குமரி, திருவண்ணாமலை, விழுப்புரம்(கிழக்கு, மேற்கு) தேனி, தஞ்சை(வடக்கு, தெற்கு), விருதுநகர், ,மதுரை, ராம்நாடு தெற்கு, நாகை வடக்கு, பாண்டிச்சேரி, காஞ் சி(கிழக்கு, மேற்கு), கோவை (தெற்கு, வடக்கு), அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுதும் தவ்ஹீத் ஜமாத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் வஞ்சிக்கப்பட்டவர்களின் உணர்வுகளையும் கோப அலைகளையும் உலகிற்கு கொண்டு சேர்ப்பதோடு இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட காவி காட்டுமிராண்டிகளை தூக்கிலிட வலியுறுத்தி கோரிக்கையை இந்த ஆளும் அரசுகளுக்கு அறிவிக்கிறது.

தொடரும் இது போன்ற கொடுஞ் செயல்களை இந்திய மண்ணில் இருந்து துடைத்தெரிய காவி மிருகங்களை தூக்கிலிடுமா இந்திய அரசு. அல்லது காஷ்மீரிய இஸ்லாமிய சிறுமி என்பதால் வாய்மூடியாகவே இருந்து மவுனம் சாதிக்குமா. கூட்டு மன்சாட்சியால் பல அப்பாவிகளை தூக்குமேடயிலேற்றிய அரசு.. ஒன்றும் அறியா ஆஷிபாவை துடிக்க துடிக்க கற்பழித்து கொலை செய்த காட்டுமிரண்டிகளை தூக்கிலேற்றுமா இந்திய நீதி!

 

Source : unarvu ( 20/04/18 )