அழகு நிலையங்களில் அழகுபடுத்திக் கொள்ளலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

அழகு நிலையங்களில் அழகுபடுத்திக் கொள்ளலாமா?

இன்றைய காலத்தில் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று அலங்கரித்து வருகிறார்கள். மார்க்க வரம்புகளை மீறாமல் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வது தவறில்லை.

தற்காலத்தில் அழகு நிலையங்களுக்குச் செல்கின்ற பெண்கள் அழகிற்காகப் பல் வரிசைகளை விலக்குதல், புருவங்களை மழித்தல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். செயற்கைப் புருவங்களை நாளுக்கு நாள் மாற்றிக் கொள்கிறார்கள்.

“பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!’’ நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(புகாரி: 5931)

இறைவனுடைய படைப்பை மாற்றுகின்ற இதுபோன்ற காரியங்களைத் தவிர்த்துவிட்டு மார்க்கம் தடை செய்யாத வகையில் அழகுபடுத்திக் கொள்வது தவறில்லை. அதே நேரத்தில் தனது அழகை அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்