11) அழகிய முறையில் கஃபனிடுதல்
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
உடலின் பாகங்கள் திறந்திருக்காத வகையிலும், உள் உறுப்புகளை வெளிக்காட்டாத வகையிலும், ஏனோ தானோ என்றில்லாமலும் நேர்த்தியாகக் கஃபன் இட வேண்டும்.
‘உங்களில் ஒருவர் தமது சகோதரருக்குக் கஃபன் இட்டால் அதை அழகுறச் செய்யட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)