அல்லாஹும்ம பாரிக் லனா இந்த துஆ தொடர்பான செய்தி

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

அல்லாஹும்ம பாரிக் லனா

இந்த துஆ தொடர்பான செய்தி

“அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வஷஃபான் வபல்லிக்னா ரமலான்“ என்ற துஆ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த துஆ தொடர்பான செய்தி பற்றி அறிந்துக் கொள்வோம்.

مسند أحمد بن حنبل (1/ 259)
2346 – حدثنا عبد الله ثنا عبيد الله بن عمر عن زائدة بن أبي الرقاد عن زياد النميري عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه و سلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان وكان يقول ليلة الجمعة غراء ويومها أزهر

நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் நுழையும் போது “அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வஷஃபான் வபாரிக் லனா ஃபீ ரமலான்“ – இறைவா ரஜப் மற்றும் ஷஃபானில் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! ரமலானிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
இந்த செய்தி முஸ்னது அஹ்மத், முஸ்னத் அல்பஸ்ஸார், தப்ரானீ, பைஹகீ போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் முஸ்னத் அஹ்மதை தவிர மற்ற புத்தகங்களில், பாரிக் லனா ஃபீ ரமலான் என்பதற்கு பதிலாக வபல்லிக்னா ரமலான் – எங்களை ரமலான் மாதத்தை அடையச் செய்வாயாக! என்று இடம்பெற்றுள்ளது.
இதன் அனைத்து அறிவிப்புகளிலும் ஸியாத் அந்நுமைரீ என்பவரும் அவருடைய மாணவர் ஸாயிதா பின் அபிர்ருகாத் என்பவரும் இடம்பெறுகிறார்கள். இவர்கள் இருவரும் கடும் பலவீனமானவர்கள்.
ஸியாத் அந்நுமைரீ தொடர்பான விமர்சனங்கள்:

قال عباس الدورى ، عن يحيى بن معين : ضعيف الحديث .
و قال فى موضع آخر : ليس به بأس . قيل له : هو زياد أبو عمار ؟ قال : لا ، حديث
أبى عمار ليس بشىء .
و قال عبد الله بن أحمد ابن الدورقى ، عن يحيى بن معين : فى حديثه ضعف .
و قال أبو حاتم : يكتب حديثه ، و لا يحتج به .
و قال أبو عبيد الآجرى : سألت أبا داود عنه فضعفه .
و ذكره ابن حبان فى كتاب ” الثقات ” ، و قال : يخطىء و كان من العباد .
و روى له أبو أحمد بن عدى أحاديث من رواية جابر الجعفى ، و عدى بن أبى عمارة ،
و أبى جناب القصاب ، عنه ، ثم قال : و لزياد النميرى غير ما ذكرت من الحديث عن أنس ، و الذى ذكرت له من الحديث من يرويه عنه فيه نظر ، و البلاء منهم لا منه ،
و عندى : إذا روى عن زياد النميرى ثقة فلا بأس بحديثه .
روى له الترمذى حديثا واحدا ” من بنى لله مسجدا ” . اهـ .
قال الحافظ في تهذيب التهذيب 3 / 378 :
و ذكره ابن حبان فى ” الضعفاء ” أيضا ، و قال : منكر الحديث ، يروى عن أنس اشياء لا تشبه حديث الثقات ، تركه ابن معين . اهـ .

இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்றும் இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவர் அறிவிக்கும் செய்திகள் ஆதாரமாக எடுக்கப்படாது என்று இமாம் அபூஹாதம் கூறியுள்ளார்.
இவர் பலவீனமானவர் என்றும் இமாம் அபூதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

பார்க்க: தஹ்தீபுல் கமால், தஹ்தீபுத் தஹ்தீப்.

இவ்வாறு பல இமாம்களால் இவர் விமர்சிக்கப்பட்டுள்ளதால் இவர் பலவீனமானவர் ஆவார்.
இவரது மாணவர் ஸாயிதா பின் அபிர்ருகாத் என்பவர் தொடர்பான விமர்சனங்கள்:

قال المزي في تهذيب الكمال :
( س ) : زائدة بن أبى الرقاد الباهلى ، أبو معاذ البصرى الصيرفى صاحب الحلى ، صديق حماد بن زيد . اهـ .
و قال المزى :
قال القواريرى : لم يكن به بأس ، و كتبت كل شىء عنده .
و قال أبو حاتم : يحدث عن زياد النميرى عن أنس أحاديث مرفوعة منكرة ، و لا ندرى
منه أو من زياد ، و لا أعلم روى عن غير زياد فكنا نعتبر بحديثه .
و قال البخارى : منكر الحديث .
و قال أبو داود : لا أعرف خبره .
و قال النسائى : لا أدرى من هو .
و قال خالد بن خداش : حدثنا زائدة أبو معاذ صديق كان لحماد بن زيد .
روى له النسائى حديثا واحدا عن ، عاصم الأحول ، عن عمرو بن شعيب ، عن أبيه ، عن
جده : ” تلك اللوطية الصغرى ” . اهـ .
ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ ْ
قال الحافظ في تهذيب التهذيب 3 / 305 :
و قال أبو أحمد الحاكم : حديثه ليس بالقائم . 
و قال النسائى فى كتاب ” الضعفاء ” : منكر الحديث .
و قال فى ” الكنى ” : ليس بثقة .
و قال ابن حبان : يروى المناكير عن المشاهير ، لا يحتج بخبره ، و لا يكتب إلا للاعتبار .
و قال ابن عدى : يروى عنه المقدمى و غيره أحاديث إفرادات ، و فى بعض أحاديثه ما ينكر .
و قال البزار : لا بأس به ، و إنما نكتب من حديثه ما لم نجد عند غيره . اهـ .

இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி மற்றும் இமாம் நஸாயீ கூறியுள்ளார்.
இவரது செய்தி ஆதாரமாக எடுக்கப்படாது என்று இமாம் இப்னு ஹிப்பான் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஸியாத் அந்நுமைரீ என்பவரிடமிருந்து அனஸ்(ரலி) அறிவிப்பதாக மறுக்கத்தக்க செய்திகளை அறிவிப்பார் என்று இமாம் அபூஹாதம் கூறியுள்ளார். (இந்த செய்தி அவ்வாறு தான் அமைந்துள்ளது.)

பார்க்க: தஹ்தீபுல் கமால், தஹ்தீபுத் தஹ்தீப்.

இவ்வாறு இவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளதால் இந்த செய்தி பலவீனமானது. இது நபிகளார் கற்றுத் தந்ததாக பிரார்த்திக்க தகுந்தது அல்ல!