038. அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ….. என்று நிய்யத் உள்ளதா?
நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்; எனக்கு அதை எளிதாக்கி, ஏற்றுக் கொள்வாயாக’ (அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ, ஃபயஸ்ஸிர்ஹுலீ வதகப்பல்ஹு மின்னீ) என்று நிய்யத் உள்ளதா?
இது பித்அத்
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.
ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும்.
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க உம்ரதன்” என்று கூற வேண்டும்.
இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
தமத்துஃ அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ரா செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம உம்ரத்தன்’ என்றும் பிறகு ஹஜ் செய்யும் போது, “லப்பைக்கல்லாஹும்ம ஹஜ்ஜத்தன்’ என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட இந்த வார்த்தைகளைத் தவிர்த்து, “நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்; எனக்கு அதை எளிதாக்கி, ஏற்றுக் கொள்வாயாக’ (அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ, ஃபயஸ்ஸிர்ஹுலீ வதகப்பல்ஹு மின்னீ) என்று சிலர் கூறுகின்றர். இது பித்அத்தாகும்.