119) அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்தல் அவசியம்
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
மரணத்தை நெருங்கும் போது நாம் செய்த தவறுகள் நினைவுக்கு வரும். இதற்காக இறைவன் நம்மிடம் கொடூரமாக நடந்து கொள்வானோ என்று எண்ணாமல் அவனிடம் மன்னிப்புக் கேட்டால் நம்மை மன்னித்து அரவணைப்பான் என்று நல்லெண்ணம் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டவராகவே தவிர உங்களில் எவரும் மரணிக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)