1) அறிமுகம்

நூல்கள்: மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி?

அறிமுகம்

மதத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் வயதில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து பணியும் வழக்கம் முஸ்லிமல்லாத மக்களிடம் நடைமுறையில் உள்ளது.

சில முஸ்லிம்களும் இதைக் காப்பியடித்து மத குருமார்களின் கால்களில் விழுந்து பணிவதைப் புனிதமான காரியமாகக் கருதுகின்றனர்.

ஒரு மனிதனை எப்படி மதிக்க வேண்டும்? எந்த அளவுக்குக் கண்ணியப்படுத்த வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது. அதைப் பேணாமல் பிற மதத்தவர்களைக் காப்பியடித்து சில முஸ்லிம்கள் மத குருமார்களின் கைகளைத் தொட்டு முத்தமிடுகின்றனர். அவர்களின் கையால் அற்பமான பொருட்களை வாங்குவது பெரும் பாக்கியம் என்று கருதுகின்றனர். மதகுருமார்களை மனித நிலைக்கு மேல் உயர்த்துகின்றனர்.

இவற்றுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்று விளக்குவதுடன் இவற்றை ஆதரிப்பவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கும் இந்த நூலில் தக்க பதில் சொல்லப்பட்டுள்ளது. மத குருமார்கள் மீது பக்தி கொண்டு வழிதவறிய மக்களின் கண்களை இந்நூல் திறக்க வேண்டும் என்று அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.

அன்புடன் நபீலா பதிப்பகம்.

ஆசிரியர் : பீ ஜைனுல் ஆபிதீன்