122. அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் பரிகார நோன்பு நோற்கலாமா?
குர்பானி கொடுக்க இயலாதவர்கள் அங்கு இருக்கும்போது நோற்க வேண்டிய அந்த மூன்று நோன்புகளை அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் நோற்கலாம் என்று கூறுகிறீர்கள். பொதுவாகவே அந்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் அல்லவா? ஹாஜிகளுக்கு மட்டும் அந்த நாட்களில் நோன்பு நோற்க சலுகை உள்ளதா? அல்லது அய்யாமுத் தஷ்ரீக் முடிந்த பிறகு நோன்பு நோற்றுவிட்டு தவாஃபுல் விதா செய்யவேண்டுமா?
பதில்
ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது:
குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!
மேற்கண்ட ஹதீஸ் குர்பானிப் பிராணி கிடைக்காதவர் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதியளிக்கின்றது.