அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹிஜாப் அணிந்த பெண்!

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

சோமாலியா முஸ்லிம் அகதி இல்ஹான் உமர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அகதிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவேன் என புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்.ஆனால் அவர்களின் பிரதிநிதியாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினாராகியுள்ளார் ஒரு அகதி.

மூன்றுகுழந்தைகளுக்குத்தாயான முப்பத்து நான்கு வயதான இல்ஹான் உமர்
சோமாலியாவில் ஏற்பட்ட உள்நாட்டின் போரின் போது புலம் பெயர்ந்து பதிமூன்றாம் வயதில் தன்தந்தையுடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து மூன்றே மாதங்களில் ஆங்கிலம் கற்று அரசியலில் ஆர்வம் காட்டினார்.

பல பொது சேவைகளில் ஈடுபட்டு மக்களின் அன்பைப் பெற்றார்.

முதல் முஸ்லிம் பெண் உறுப்பினராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்து சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் குறிப்பிடுகின்றன..

அவர் வெற்றி பெற்று நூற்றுக்கணக்கான அவரின் ஆதரவாளர்கள் குழுமியிருந்த அரங்கத்தி்ற்கு வந்தபோது அங்கிருந்தோர் இல்ஹான,இல்ஹான் என ஆரவாரம் செய்தனர். பல பெண்கள் அவரைக் கட்டி அணைத்து உணர்ச்சிப் பெருக்கில் அழுதனர். அந்தக் கூட்டத்தில் அவர் பேசும் பொழுது,

I think I bring the voice of young people,” “I think I bring the voice of women in the East African community. I bring the voice of Muslims. I bring the voice of young mothers looking for opportunities.” எனக் குறிப்பிட்டார்.

இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என அமெரிக்கர்களுக்கிடையே வெறுப்புணர்ச்சி வளர்க்கப்பட்ட பின்பும் ஒரு இளம் முஸ்லிம் பெண அமெரிக்க நாடாளுமன்றத்தில் முஸ்லிம் அடையாளத்துடன் நுழைகிறார் என்றால் அது அல்லாஹ் தான் நாடியவர்களை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்வான் என்பதற்கான அத்தாட்சிதானே!,

Source: http://www.bbc.com/news/election-us-2016-37925048