அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர்கள் என்பதற்காக தொடர் கொலைகள் அமெரிக்காவில் நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகரை சேர்ந்தவர் ஷாகித் வாஷெல் (வயது 34). ஜமைக்காவில் பிறந்த இவர் கருப்பு இனத்தவர் ஆவார். புரூக்ளின் நகரில் ‘வெல்டிங்’ வேலை பார்த்துவந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் மாலை ஷாகித் வாஷெல் புரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீதியில் நடந்த சென்றுகொண்டிருந்தார்.அப்போது அவர் தன் கையில் இரும்பு குழாய் ஒன்றை வைத்திருந்தார்.
அந்த வழியாக நடந்து சென்றவர்கள், அவர் கையில் வைத்திருந்த இரும்புக் குழாயை துப்பாக்கி என நினைத்து, அச்சம் அடைந்து, போலீஸ் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் 4 பேர் ஷாகித் வாஷெலை சுற்றிவளைத்தனர். இதனால் பதறிப்போன ஷாகித் வாஷெல், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். பின்னர் அவர் தனது கையில் இருந்த இரும்பு குழாயை போலீசாரிடம் காட்டுவதற்காக அவர்களை நோக்கி நீட்டினார்.
ஆனால் அவர் தங்களைச் சுடும் நோக்கில் துப்பாக்கியைத் தான் நீட்டுகிறார் என்று எண்ணிய போலீஸ் அதிகாரிகள் ஷாகித் வாஷெலைச் சரமாரியாக சுட்டனர். 4 போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து 10 முறை அவரைச் சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதன் பின்னர் அவர் அருகில் சென்று பார்த்தபோது, அவர் கையில் இருந்தது துப்பாக்கி அல்ல, இரும்புக் குழாய் என்பது போலீசாருக்குத் தெரியவந்தது. உடனே போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷாகித் வாஷெலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். கடந்த மாதம் 18ஆம்தேதி கலிபோர்னியா மாகாணத்தில் 22 வயதான கருப்பு இனத்தவர் கையில் வைத்திருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்து, போலீசார் அவரைச் சுட்டுக்கொன்றனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரிகளை கண்டித்து கருப்பு இனத்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு கருப்பு இனத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டது அமெரிக்காவில் வாழும் கருப்பு இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சக மனிதனை கருப்பர் என்பதற்காக கொலை செய்வது எவ்வளவு கொடுமையான மனிதாபிமானமற்ற செயல். இதை எந்த உறுத்தலும் இல்லாமல் செய்கிறார்கள் என்றால் அறிவில் எவ்வளவு தான் முன்னேறியிருந்தாலும் இது போன்ற விசயங்களில் அறியாமையில் தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது போன்ற இனவெறி, மொழிவெறி, சாதி வெறி உள்ளிட்ட அனைத்தும் நீங்க இஸ்லாம் மட்டுமே தீர்வு!
அனைவரும் ஒரே மனிதரிலிருந்தே படைக்கப்பட்டுள்ளனர் என்ற இஸ்லாமிய கோட்பாட்டை ஏற்றுக்கொண்டால் தன்னை விட கீழ்ச்சாதி, வேற்று மொழி, இழிவான இனம் என்ற எண்ணம் எந்த மனிதனுக்கும் வராது. ஏனெனில் அவன் கருப்பாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும் அவனுக்கும் எனக்கும் ஒரே தாய்,தந்தை தான் என்ற சிந்தனை வரும். அதனால்தான் முஸ்லிம்கள் மத்தியில் இதுபோன்ற இனப் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கிறது…
Source : unarvu ( 04/05/2018 )