அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் காயமுற்ற போது
முக்கிய குறிப்புகள்:
குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்
(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கை யாகவே இருங்கள் எனும் (அல்குர்ஆன்: 4:102) ➚ஆவது) இறைவசனம்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ”(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை” எனும் (அல்குர்ஆன்: 4:102) ➚ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது, அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் காயமுற்றுக் கிடந்தார்கள். (அப்போது இந்த வசனம் அருளப்பட்டது) என்று சொன்னார்கள்.