அபூபக்ர் ஈமானும் உலக மக்கள் ஈமானும்
முக்கிய குறிப்புகள்:
மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானும் உலக மக்களின் ஈமானும்
ثنا محمد بن أحمد بن بخيت ثنا أحمد بن عبد الخالق الضبعي ثنا عبد الله بن عبد العزيز بن أبي رواد أخبرني أبي عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لو وزن إيمان أبي بكر بإيمان أهل الأرض لرجح – الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع – (4 ஃ 201)
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானையும் பூமியிலுள்ளவர்களின் ஈமானையும் நிறுக்கப்பட்டால் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஈமானே மேலேங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அல்காமில்- இப்னு அதீ, பாகம் : 4. பக்கம் : 201)
இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பலவீனமானவர். நபிகளார் கூறியதாக இக்கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.