அபூபக்ரை முந்த முயன்ற உமர்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றாற்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. “ஏதேனும் ஒரு நாளில் அபூபக்ரை நான் முந்த வேண்டுமாயின் இந்த நாளில் முந்தி விட வேண்டியது தான்” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதாரத்தில் பாதியைக் கொண்டு வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது குடும்பத்திற்காக என்ன வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “இது போன்றதை” என்று பதிலளித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் தன்னிடம் உள்ள பொருளாதாரம் அனைத்தையுமே கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக என்ன வைத்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவர்களுக்கு வைத்திருக்கின்றேன்” என்று பதிலளித்தார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எதிலும் அவரை முந்த முடியாது” என்று நான் சொன்னேன்.

அறிவிப்பவர்: உமர்(ரலி)

நூல்கள்:(திர்மிதீ: 3608),(அபூதாவூத்: 1429)

இது அறிவிப்பாளர் குறையுடைய ஹதீஸாகும்.