அனாதைகள், பெண்கள் உரிமையில் அநீதமாக நடப்போரை எச்சரிக்கிறேன்
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
”இறைவா! அனாதைகள் பெண்கள் ஆகிய இந்த இரண்டு பலவீனமானவர்களின் உரிமையில் (அநீதமாக நடப்போரை) நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.”
இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அஸ்ஸுனனுல் குப்ரா எனும் நூலில் பதிவுசெய்துள்ளார்கள்.
இமாம் நவவீ அவர்கள் அனாதைகள் பெண்கள் பலவீனர் ஏழைகள் ஆகியோரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுதல் அவர்களுக்கு நன்மை செய்தல் இரக்கம் காட்டுதல் என்ற 29 வது தலைப்பின் கீழ் 268 வது செய்தியாக இதை பதிவுசெய்துள்ளார்கள்.
இந்த செய்தியில் முஹம்மது பின் அஜ்லான் என்பவரும் அப்துல்லாஹ் பின் சயீத் பின் அபீ சயீத் என்பவரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இரு வரும் பலவீனமானவர்கள்.
எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது