அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற செய்தி சரியா?

கேள்வி-பதில்: தொழுகை

விரலசைத்தல் தொடர்பான தெளிவான ஹதீஸ்கள்
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍأَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன் அப்போது அவர்கள், எழுந்து நின்று தக்பீர் கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் ருகூஉ செய்ய விரும்பிய போது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை உயர்த்தினார்கள். (பின்னர்) தம் கைகளை மூட்டுக்கால்களின் மீது வைத்தார்கள். பின்னர் தமது தலையை (ருகூஉவிலிருந்து நிமிர்த்திய போது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் சஜ்தா செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து எழுந்து) அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள். தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும், கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

(நஸாயீ: 870)

விரல் அசைத்தல் தொடர்பான இந்தச் செய்தி
أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله بن المبارك عن زائدة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر أخبره قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فقام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد فلما أراد أن يركع رفع يديه مثلها قال ووضع يديه على ركبتيه ثم لما رفع رأسه رفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها ; سنن النسائي 
 أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله بن المبارك عن زائدة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فوصف قال ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقة ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها مختصر ; سنن النسائي 879
حدثنا عبد الصمد حدثنا زائدة حدثنا عاصم بن كليب أخبرني أبي أن وائل بن حجر الحضرمي أخبره قال قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي قال فنظرت إليه قام فكبر ورفع يديه حتى حاذتا أذنيه ثم وضع يده اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد ثم قال لما أراد أن يركع رفع يديه مثلها ووضع يديه على ركبتيه ثم رفع رأسه فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد فافترش رجله اليسرى فوضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض بين أصابعه فحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها ثم جئت بعد ذلك في زمان فيه برد فرأيت الناس عليهم الثياب تحرك أيديهم من تحت الثياب من البرد ; مسند أحمد 
حدثنا معاوية بن عمرو حدثنا زائدة بن قدامة حدثنا عاصم بن كليب أخبرني أبي أن وائل بن حجر أخبره قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فقام فكبر فرفع يديه حتى حاذتا بأذنيه ووضع يده اليمنى على ظهر كفه اليسرى قال ثم لما أراد أن يركع رفع يديه مثلها ووضع يديه على ركبتيه ثم رفع رأسه فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد فافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض ثنتين فحلق حلقة ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها قال ثم جئت بعد ذلك في زمان فيه برد فرأيت على الناس جل الثياب يحركون أيديهم من تحت الثياب ; سنن الدارمي 
حدثنا إسحاق بن منصور قال ثنا عبد الرحمن يعني بن مهدي عن زائدة بن قدامة عن عاصم بن كليب قال أخبرني أبي أن وائل بن حجر رضي الله عنه قال ثم قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه قام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع كفه اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد ثم ركع فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء اليسرى ثم جلس فافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى ووضع حد مرفقه اليمنى على فخذه اليمنى ثم قبض ثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو ثم جئت بعد ذلك في زمن فيه برد فرأيت الناس وعليهم جل الثياب تحرك أيديهم من تحت الثياب -المنتقى لابن الجارود ج: 
أنا أبو طاهر نا أبو بكر نا محمد بن يحيى نا معاوية بن عمرو حدثنا زائدة نا عاصم بن كليب الجرمي أخبرني أبي أن وائل بن حجر أخبره قال ثم قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي قال فنظرت إليه يصلي فكبر فذكر بعض الحديث وقال ثم قعد فافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض ثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها قال أبو بكر ليس في شيء من الأخبار يحركها إلا في هذا الخبر زائد ذكره – صحيح ابن خزيمة ج: 1 ص:
أخبرنا الفضل بن الحباب قال حدثنا أبو الوليد الطيالسي قال حدثنا زائدة بن قدامة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر الحضرمي أخبره قال ثم قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه حين قام فكبر ورفع يديه حتى حاذتا اليسرى ثم وضع يده اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد ثم لما أراد رفع يديه مثلها ثم ركع فوضع يديه على ركبتيه ثم رفع رأسه فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء اذنيه ثم جلس فافترش فخذه اليسرى وجعل يده اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى وعقد ثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها ثم جئت بعد ذلك في زمان فيه برد فرأيت الناس عليهم جل الثياب تتحرك أيديهم تحت الثياب – صحيح ابن حبان ج: 5 ص:
حدثنا محمد بن النضر الأزدي ثنا معاوية بن عمرو ح وحدثنا أبو خليفة ثنا أبو الوليد الطيالسي قالا ثنا زائدة عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر قال ثم قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على ظهر كفه اليسرى بين الرسغ والساعد ثم لما أراد رفع يديه مثلها ووضع يديه على ركبتيه ثم رفع رأسه فرفع يديه مثلها ثم سجد فجعل كفيه حذاء اليسرى ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض ثنتين من أصابعه وحلق حلقة ثم رفع أصبعه ورأيته يحركها يدعو بها ثم جئت بعد ذلك في زمان فيه برد فرأيت الناس عليهم جل الثياب يحرك أيديهم من تحت الثياب واللفظ لحديث معاوية بن عمرو – المعجم الكبير ج: 22 ص: 
أخبرنا سويد بن نصر قال أنا عبد الله بن المبارك عن زائدة قال نا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجرأخبره قال قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فقام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد ثم لما أراد أن يركع رفع يديه مثلها قال ووضع يديه على ركبتيه ثم لما رفع رأسه رفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقة ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها النهي عن التخصر في الصلاة – السنن الكبرى ج: 1 ص: 
أخبرنا سويد بن نصر قال أنا عبد الله يعني بن المبارك عن زائدة قال نا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجرقال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فوصف قال ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق خلقة ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها مختصر بسط اليسرى على الركبة – السنن الكبرى ج: 1 ص: 
أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله بن المبارك عن زائدة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجر أخبره قال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فقام فكبر ورفع يديه حتى حاذتا بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى والرسغ والساعد فلما أراد أن يركع رفع يديه مثلها قال ووضع يديه على ركبتيه ثم لما رفع رأسه رفع يديه مثلها ثم سجد فجعل كفيه بحذاء أذنيه ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقة ثم رفع إصبعه فرأيته يحركها يدعو بها – سنن النسائي (المجتبى) ج: 2 ص: 
أخبرنا سويد بن نصر قال أنبأنا عبد الله بن المبارك عن زائدة قال حدثنا عاصم بن كليب قال حدثني أبي أن وائل بن حجرقال قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم كيف يصلي فنظرت إليه فوصف قال ثم قعد وافترش رجله اليسرى ووضع كفه اليسرى على فخذه وركبته اليسرى وجعل حد مرفقه الأيمن على فخذه اليمنى ثم قبض اثنتين من أصابعه وحلق حلقه ثم رفع أصبعه فرأيته يحركها يدعو بها سنن النسائي (المجتبى) ج: 3 ص: 37

 

தாரமீ

அஹ்மத்

ஸஹீஹ் இப்னு ஹுஸைமா

ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

தப்ரானீ கபீர்

பைஹகீ

ஸுனனுல் குப்ரா

அல்முன்தகா இப்னுல் ஜாரூத்

ஆகிய நூற்களிலும் இடம்பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. இதை வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார்.

இந்த நபித்தோழர் ஹள்ர மவ்த் என்ற ஊரைச் சேர்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள் என்பதைக் கவனித்து அறிவதற்காகவே அவர் மதீனா வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் முறையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு செயலையும் நன்கு கவனித்து அறிவித்துள்ளார்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற இந்த நபித்தோழரின் கூற்று தெளிவானதும் உறுதியானதுமாகும்.

இதே ஹதீஸ் தாரமியிலும் இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தியில் இருப்பில் விரலசைப்பதை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் வாசகம் இடம் பெற்றுள்ளது.

حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي

…….. இதற்குப் பிறகு குளிர் காலத்தில் நான் மறுபடியும் வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல் : தாரமீ-1323

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமின்றி நபித்தோழர்களும் தொழுகையில் விரலசைத்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது.

அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற செய்தி சரியா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற செய்தி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் விரலை அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي

அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தமது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள்.

நூல்: நஸாயீ

இந்த ஹதீஸில் அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைக்க மாட்டார்கள் என்று சொல்லப்படவில்லை. துஆ செய்யும் போது விரலை அசைக்க மாட்டார்கள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் விரல் அசைக்க வேண்டும் என்ற நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ்களில் அத்தஹிய்யாத் இருப்பில் அதைச் செய்த்தாக தெளிவாகக் கூறுகிறது.

இந்த ஹதீஸை முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து ஜந்து பேர் அறிவித்துள்ளனர்.

லைஸ் பின் சஅத்,

அபூ காலிதில் அஹ்மர்,

இப்னு உஐனா,

யஹ்யா பின் சயீத்

இந்த நால்வரும் தங்களுடைய அறிவிப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஷாராச் செய்வார்கள் என்ற தகவலை மட்டுமே அறிவிக்கின்றனர்.

முஹம்மது பின் அஜ்லானுடைய மாணவர்களில் ஸியாத் மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஹதீஸை ஆமிர் பின் அப்தில்லாஹ்விடமிருந்து முஹம்மது பின் அஜ்லான் மட்டும் அறிவிக்கவில்லை. உஸ்மான் பின் ஹகீம் மக்ரமா பின் புகைர் முஹம்மது பின் அஜ்லான் ஆகிய மூவர் இந்த ஹதீஸை ஆமிரிடமிருந்து அறிவிக்கின்றனர்.

இந்த மூவரில் முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அல்லாத மற்ற இருவரும் இந்த வாசகத்தைக் குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் இஷாரா (சமிக்கை) செய்வார்கள் என்று மட்டுமே அறிவித்துள்ளனர்.

எனவே இவர்கள் ஆதாரமாகக் காட்டும் மேற்கண்ட அறிவிப்பாளர் தொடர் ஏராளமான மற்ற தொடர்களுக்கு மாற்றமாக இருப்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஷாத்) ஆகும்.