29) அதிகம் பேர் சொல்வது ஆதாரமாகுமா

நூல்கள்: பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

சூனியத்தை நம்பாதவர்களை விட சூனியத்தை நம்புபவர்கள் அதிகமானவர்களாக இருக்கிறார்கள். அதிகமானவர்களாக இருப்பதால் இதனைச் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

இஸ்லாமியர்கள் அதிகமா, இணைவைப்பவர்கள் அதிகமா என்றால் இணைவைப்பர்கள் தான் அதிகமானவர்களாக இருப்பார்கள்.

இதனால் இஸ்லாத்திற்குத் தோல்வி என்று சொல்ல முடியுமா?

மக்களில் பெரும்பாலும் அறியாதவர்கள் உள்ளார்கள். மக்களில் பெரும்பாலும் விபரமில்லாதவர்கள் உள்ளார்கள் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். பார்க்க : 7:187, 12:21, 12:40, 12:68, 16:38, 30:6, 30:30, 34:28, 34:36,40:57, 45:26

நாம் இந்த இரண்டு மாறுபட்ட கருத்துக்களையும் வைத்து,

எது ஏற்கத்தக்கதாக இருக்கின்றது.

எது பொருத்தமாக இருக்கின்றது.

எது இஸ்லாத்தை மேலோங்கச் செய்வதாக இருக்கின்றது.

எது நபிகள் நாயகத்தின் மதிப்பைக் கூட்டுவதாக இருக்கின்றது.

எது குர்ஆனுடைய கண்ணியத்தை அதிகப்படுத்துவதாக இருக்கின்றது.

மக்களை ஏமாற்றுவதை எது தடுக்கக் கூடியதாக இருக்கின்றது.

என்று சிந்தித்துப் பார்த்து அந்தக் கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.