அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர்!
இந்த செய்தி பலவீனமானதாகும்.
2373 – حدثنا محمد بن السري بن سهل القنطري البغدادي ، ثنا داود بن رشيد ، ثنا سويد بن عبد العزيز ، ثنا عثمان بن عطاء ، عن أبيه ، عن عمرو بن شعيب ، عن أبيه ، عن جده ، أن رسول الله صلى الله عليه وسلم قال : « من أغلق بابه دون جاره مخافة على أهله وماله فليس ذلك بمؤمن ، وليس بمؤمن من لم يأمن جاره بوائقه (1) ، أتدرون ما حق الجار ؟ إن استعانك أعنته (2) ، وإن استقرضك أقرضته ، وإن افتقر عدت عليه ، وإن مرض عدته (3) ، وإن مات شهدت جنازته ، وإن أصابه خير هنأته ، وإن أصابته مصيبة عزيته ، ولا تستطيل عليه بالبناء ، فتحجب عنه الريح إلا بإذنه ، وإذا شريت فاكهة فاهد له ، فإن لم تفعل فأدخلها سرا ، ولا يخرج بها ولدك ليغيظ بها ولده ، ولا تؤذه بقيثار قدرك إلا أن تغرف له منها » فما زال يوصيهم بالجار حتى ظننا أنه سيورثه ، ثم قال رسول الله صلى الله عليه وسلم : « الجيران ثلاثة ، فمنهم من له ثلاث حقوق ، ومنهم من له حقان ، ومنهم من له حق واحد ، فأما الذي له ثلاث حقوق فالجار المسلم القريب ، له حق الإسلام وحق الجوار وحق القرابة ، وأما الذي له حقان فالجار المسلم ، له حق الجوار وحق الإسلام ، وأما الذي له حق واحد فالجار الكافر ، له حق الجوار » قالوا : يا رسول الله أنعطيهم من لحوم النسك ؟ فقال : « لا تعط المشركين من نسك المسلمين »
அண்டைவீட்டார் முஸ்லிமாக இல்லாமலிருந்தால் அவருக்கு அண்டைவீட்டாரின் உரிமை மட்டும் கிடைக்கும்.
அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர்.
1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டைவீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது.
2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டைவீட்டார்.இவர் முஸ்லிமான அண்டைவீட்டார். இவருக்கு அண்டைவீட்டார் உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு.
3. மூன்று உரிமைகள் உள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டைவீட்டடார் என்று உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : தப்ரானீ அவர்களுக்குரிய முஸ்னதுஷ் ஷாமியீன், பாகம் :7 பக்கம் :185)
இந்த செய்தி பலவீனமானதாகும்.
அறிவிப்பாளரிகளின் தரம் : இதில் வரும் உஸ்மான் பின் அதா என்பவர் பலவீனமானவர் ஆவார் இவரை இமாம் ஹாகிம், இமாம் அபுல் அல் – காஸிம் ,இமாம் பைஹகீ ,இமாம் நஸாயீ ,இமாம் தாரகுத்தினீ ,இமாம் முஸ்லிம் மற்றும் இமாம் இப்னு மயீன் இவர்கள் அனைவரும் இவருடைய அறிவிப்புகளை எடுத்து கொள்ள கூடாது என்று விமர்ச்சித்து உள்ளார்கள்.