Tamil Bayan Points

95) அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் அடிமைகளே என்பதால்..

நூல்கள்: குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

Last Updated on October 28, 2023 by

96) அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் அடிமைகளே என்பதால்

இணை கற்பிக்க நியாயம் இல்லை

3:79 مَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّؤْتِيَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّىْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ كُوْنُوْا رَبَّانِيّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَۙ‏

 

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின்  அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!  என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக,  வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!  (என்றே கூறினர்)

(திருக்குர்ஆன்:3:79.)

4:172 لَنْ يَّسْتَـنْكِفَ الْمَسِيْحُ اَنْ يَّكُوْنَ عَبْدًالِّلّٰهِ وَلَا الْمَلٰٓٮِٕكَةُ الْمُقَرَّبُوْنَ‌ؕ وَمَنْ يَّسْتَـنْكِفْ عَنْ عِبَادَ تِهٖ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ اِلَيْهِ جَمِيْعًا‏

 

மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

(திருக்குர்ஆன்:4:172.)

7:194 اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ‌ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(திருக்குர்ஆன்:7:194.)

18:102 اَفَحَسِبَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنْ يَّتَّخِذُوْا عِبَادِىْ مِنْ دُوْنِىْۤ اَوْلِيَآءَ‌ ؕ اِنَّاۤ اَعْتَدْنَا جَهَـنَّمَ لِلْكٰفِرِيْنَ نُزُلًا‏

 

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

(திருக்குர்ஆன்:18:102.)

19:93 اِنْ كُلُّ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِى الرَّحْمٰنِ عَبْدًا ؕ‏

 

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

(திருக்குர்ஆன்:19:93.)

21:26 وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا‌ سُبْحٰنَهٗ‌ ؕ بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۙ‏

 

அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.

(திருக்குர்ஆன்:21:26.)

43:15 وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا‌ ؕ اِنَّ الْاِنْسَانَ لَـكَفُوْرٌ مُّبِيْنٌ ؕ‏

 

அவர்கள் அவனது அடியார்களில் சிலரை (அவனில்) ஒரு பகுதியாக ஆக்குகின்றனர். மனிதன் தெளிவான நன்றி கெட்டவன்.

(திருக்குர்ஆன்:43:15.)

43:19 وَجَعَلُوا الْمَلٰٓٮِٕكَةَ الَّذِيْنَ هُمْ عِبَادُ الرَّحْمٰنِ اِنَاثًا‌ ؕ اَشَهِدُوْا خَلْقَهُمْ‌ ؕ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْــٴَـــلُوْنَ‏

 

அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்து விட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களது கூற்று பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவார்கள்.

(திருக்குர்ஆன்:43:19.)