Tamil Bayan Points

51) ஸுலைமான் நபி அல்லாஹ்வின் அடிமை

நூல்கள்: குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

Last Updated on October 28, 2023 by

51) ஸுலைமான் நபி அல்லாஹ்வின் அடிமை

38:30 وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَ‌ ؕ نِعْمَ الْعَبْدُ‌ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ ؕ ‏

 

தாவூதுக்கு ஸுலைமானை அன்பளிப்பாக வழங்கினோம். அவர் நல்லடியார். (இறைவனிடம்) திரும்புபவர்.

(திருக்குர்ஆன்:38:30.)

38:41 وَاذْكُرْ عَبْدَنَاۤ اَيُّوْبَۘ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الشَّيْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍؕ‏ 38:42 اُرْكُضْ بِرِجْلِكَ‌ ۚ هٰذَا مُغْتَسَلٌ ۢ بَارِدٌ وَّشَرَابٌ‏

அய்யூப் நபி அல்லாஹ்வின் அடிமை நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

(திருக்குர்ஆன்:38:41,42.)

38:44 وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِّهٖ وَلَا تَحْنَثْ‌ؕ اِنَّا وَجَدْنٰهُ صَابِرًا‌ ؕ نِعْمَ الْعَبْدُ‌ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ‏

 

உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்! (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் சிறந்த அடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.

(திருக்குர்ஆன்:38:44.)