Tamil Bayan Points

48) ஈஸா நபி அல்லாஹ்வின் அடிமை

நூல்கள்: குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

Last Updated on October 28, 2023 by

48) ஈஸா நபி அல்லாஹ்வின் அடிமை

4:172 لَنْ يَّسْتَـنْكِفَ الْمَسِيْحُ اَنْ يَّكُوْنَ عَبْدًالِّلّٰهِ وَلَا الْمَلٰٓٮِٕكَةُ الْمُقَرَّبُوْنَ‌ؕ وَمَنْ يَّسْتَـنْكِفْ عَنْ عِبَادَ تِهٖ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ اِلَيْهِ جَمِيْعًا‏

 

(ஈஸா எனும்) மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக  இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

(திருக்குர்ஆன்:4:172.)

19:29 فَاَشَارَتْ اِلَيْهِ‌ ؕ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا‏ 19:30 قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ ؕ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ‏

அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்!  தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?  என்று அவர்கள் கேட்டார்கள். உடனே அவர் (அக்குழந்தை),  நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்(என்று கூறியது.)

(திருக்குர்ஆன்:19:29,30)

 

43:59 اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏

 

நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் (ஈஸா) வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

(திருக்குர்ஆன்:43:59.)