Tamil Bayan Points

44) ஆய(த்)துல் குர்ஸீ

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

43) ஆய(த்)துல் குர்ஸீ

اَللهُ لاَ إِلهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَئُوْدُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ()

அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா பி[F]ஸ்ஸமாவா(த்)தி வமா பி[F]ல் அர்ளி, மன் தல்லதீ யஷ்ப[F]வு இந்தஹு இல்லா பி(B] இத்னிஹி, யஃலமு மாபை(B]ன ஐதீஹிம் வமா ஃகல்ப[F]ஹும் வலாயுஹீ(த்)தூன பி(B]ஷையின் மின் இல்மிஹி இல்லா பி(B]மா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிப்[F]ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.

இதன் பொருள்:

அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

(திருக்குர்ஆன்:2:255.)

ஆய(த்)துல் குர்ஸீயின் சிறப்பு 

தூங்குவதற்கு முன் ஓதுதல்

தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

3275 – وَقَالَ عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ ، حَدَّثَنَا عَوْفٌ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
وَكَّلَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَذَكَرَ الْحَدِيثَ فَقَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللهِ حَافِظٌ ، وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَدَقَكَ وَهْوَ كَذُوبٌ ذَاكَ شَيْطَانٌ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார் . காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்கவே மாட்டான்.

அறிவிப்பவர் அபூஹீரைரா (ரலி)

நூல் புகாரி ( 3275 )

கடமையான தொழுகைக்குப் பின் ஓதுதல்

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: சுனனுல் குப்ரா, பாகம்: 6, பக்கம் 30