Tamil Bayan Points

41) 62 – அல் ஜும்ஆ (வெள்ளிக்கிழமை)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

41) அல் ஜும்ஆ – வெள்ளிக்கிழமையின் சிறப்புத் தொழுகை 

வசங்கள் 09 முதல் 11 வரை 

أَعُوذُ بِاللَّهِ مِن الشَّيْطَانِ الرَّجِيمِ
9: يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
10: فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
11: وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌ ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ‏

அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

9. யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ இ(d)தா நூ(d)திய லிஸ்ஸலா(t)த்தி மிய்யவ்மில் ஜும்ஆ, (f)ஃபஸ்அவ் இலா (d)தி(k)க்ரில்லாஹி வ(d)தருள் பைஃ, (d)தாலி(k)கும் (kh)ஹைருல்ல(k)கும் இன்(k)குன்(t)தும் தஃலமூன்.

10.(f)ஃபஇ(d)தா (q)குலியதிஸ் ஸலா(t)த்து (f)ஃபன்(t)தஷிரூ (f)ஃபில் அர்ளி வப்(t)த(gh)ஃகூ மின் (f)ஃப(d)த்ழில்லாஹ், வ(d)த்(k)குருல்லாஹ (k)கஸீரல் லஅல்ல(k)கும் (t)து(f)ஃப்லிஹுன்.

11.வஇ(d)தா ரஅவ் (t)திஜார(t)தன் அவ்லஹ்வனின் (f)ஃப(d)த்தூ இலைஹா வ(t)தர(k)கூ(k)க (q)காயிமா, (q)குல் மா இன்(d)தல்லாஹி (kh)ஹைரும் மினல் லஹ்வி வமின(t)த் (t)திஜாரா, வல்லாஹு (kh)ஹைருர் ரா(z)ஸி(q)கீன்.

பொருள் :

9. நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.

10. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

11. “(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் : 62 : 9-11