Tamil Bayan Points

30) 85 – அல்புரூஜ் (நட்சத்திரங்கள்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

85 – அல்புரூஜ் (நட்சத்திரங்கள்)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِۙ‏
2: وَالْيَوْمِ الْمَوْعُوْدِۙ‏
3: وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍؕ‏
4: قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ‏
5: النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ‏
6: اِذْ هُمْ عَلَيْهَا قُعُوْدٌ ۙ‏
7: وَّهُمْ عَلٰى مَا يَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِيْنَ شُهُوْدٌ ؕ‏
8: وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ يُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ‏
9: الَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ ؕ‏
10: اِنَّ الَّذِيْنَ فَتَـنُوا الْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِؕ‏
11: اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕؔ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِيْرُؕ‏
12: اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ؕ‏
13: اِنَّهٗ هُوَ يُبْدِئُ وَيُعِيْدُ‌ ۚ‏
14: وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ‏
15: ذُو الْعَرْشِ الْمَجِيْدُ ۙ‏
16: فَعَّالٌ لِّمَا يُرِيْدُ ؕ‏
17: هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْجُـنُوْدِۙ‏
18: فِرْعَوْنَ وَثَمُوْدَؕ‏
19: بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ تَكْذِيْبٍۙ‏
20: وَّاللّٰهُ مِنْ وَّرَآٮِٕهِمْ مُّحِيْطٌۚ‏
21: بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌ ۙ‏
22: فِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.வஸ்ஸமாயி (D)தா(TH)தில் புரூஜ்

2.வல்யவ்மில் மவ்ஊ(D)த்

3.வஷாஹி(D)திவ் வமஷ்ஹூ(D)த்

4.(Q)கு(TH)தில அஸ்ஹாபுல் உ(KH)ஹ்(D)தூ(D)த்

5.அன்னாரி (D)தா(TH)தில் வ(Q)கூ(D)த்

6.இ(D)த்ஹும் அலைஹா (Q)குஊ(D)த்

7.வஹும் அலா மா யஃப்அலூன பில்முஃமினீன ஷுஹூ(D)த்

8.வமா ந(Q)கமூ மின்ஹும் இல்லா அய்யுஃமினூ பில்லாஹில் அ(Z)ஸீ(Z)ஸில் ஹமீ(D)த்

9.அல்ல(D)தீ லஹு முல்(K)குஸ் ஸமாவா(TH)த்தி வல்அர்ள், வல்லாஹு அலா (K)குல்லி ஷையின் ஷஹீ(D)த்

10.இன்னல்ல(D)தீன ஃப(TH)தனுல் முஃமினீன வல்முஃமினா(TH)த்தி சும்ம லம்ய(TH)தூபூ ஃபலஹும் அ(D)தாபு ஜஹன்னம வலஹும் அ(D)தாபுல் (H)ஹரீ(Q)க்

11.இன்னல்ல(D)தீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(TH)த்தி லஹும் ஜன்னா(TH)துன் (TH)தஜ்ரீ மின் (TH)தஹ்(TH)திஹல் அன்ஹார், (D)தாலி(K)கல் ஃபவ்(Z)ஸுல் (K)கபீர்

12.இன்ன (B)ப(TH)த்ஷ ரப்பி(K)க லஷ(D)தீ(D)த்

13.இன்னஹு ஹுவ யு(B)ப்(D)திஉ வயுஈ(D)த்

14.வஹுவல் (GH)ஃகபூருல் வ(D)தூ(D)த்

15.(D)துல் அர்ஷில் மஜீ(D)த்

16.ஃபஃஆலுல் லிமா யுரீ(D)த்

17.ஹல் அ(TH)தா(K)க ஹ(D)தீஸுல் ஜுநூ(D)த்

18.ஃபிர்அவ்ன வஸமூ(D)த்

19.பலில்ல(D)தீன (K)கஃபரூ ஃபீ த(K)க்(D)தீ(B)ப்

20.வல்லாஹு மிவ்வராஇஹிம் முஹீ(TH)த்

21.பல் ஹுவ (Q)குர்ஆனும் மஜீ(D)த்

22.ஃபீ லவ்ஹிம் மஹ்ஃபூழ்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. நட்சத்திரங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக!

2. வாக்களிக்கப்பட்ட நாள் மீது சத்தியமாக!

3. சாட்சி கூறுவோர் மீதும், சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக!

4, 5. எரி பொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர்.

6, 7. அவர்கள் அதனருகே அமர்ந்திருந்த போது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

8. “புகழுக்குரியவனும், மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்” என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை.

9. வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.

10. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் துன்புறுத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்தின் வேதனை இருக்கிறது. அவர்களுக்கு, பொசுக்கும் வேதனை உண்டு.

11. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இதுவே பெரும் வெற்றி.

12. உமது இறைவனின் பிடி கடுமையானது.

13. அவன் முதலில் படைக்கிறான். மீண்டும் படைக்கிறான்.

14. அவன் மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.

15. அர்ஷுக்குரியவன்; மகத்துவ மிக்கவன்.

16. நினைத்ததைச் செய்து முடிப்பவன்.

17, 18. ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூது சமுதாயத்தினரின் அந்தப் படையினர் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?

19. எனினும் (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுவதில் தான் உள்ளனர்.

20. அல்லாஹ் அவர்களுக்குப் பின்புறமிருந்து முழுமையாக அறிகிறான்.

21. ஆம்! இது மகத்தான குர்ஆன்!

22. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ளது.

அல்குர்ஆன் : 85 : 01 – 22 

ஆங்கிலம் பொருள் 

85. AL – BUROOJ – THE STARS
In the name of God, the Gracious, the Merciful.

1. By the sky with the constellations.
2. And by the Promised Day.
3. And by the witness and the witnessed.
4. Destroyed were the People of the Trench.
5. The fire supplied with fuel.
6. While they sat around it.
7. And were witnessing what they did to the believers.
8. They begrudged them only because they believed in God the Almighty, the Praiseworthy.
9. To Whom belongs the sovereignty of the heavens and the earth. God is witness over everything.
10. Those who tempt the believers, men and women, then do not repent; for them is the punishment of Hell; for them is the punishment of Burning.
11. Those who believe and do righteous deeds will have Gardens beneath which rivers flow. That is the great triumph.
12. The onslaught of your Lord is severe.
13. It is He who begins and repeats.
14. And He is the Forgiving, the Loving.
15. Possessor of the Glorious Throne.
16. Doer of whatever He wills.
17. Has there come to you the story of the legions?
18. Of Pharaoh and Thamood?
19. In fact, those who disbelieve are in denial.
20. And God encloses them from beyond.
21. In fact, it is a Glorious Quran.
22. In a Preserved Tablet.

Al’Quran : 85 : 01 – 22