Tamil Bayan Points

22) தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி

Last Updated on September 7, 2023 by

தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை

இவ்வளவு வல்லமையும் மாட்சிமையும் பொருந்திய இறைவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்டால் மக்கள் அவன் தூணிலும் துரும்பிலும் இருக்கின்றான்’ என்று பதிலளிக்கின்றார்கள். அவர்கள் அவ்வாறே நம்பியிருக்கின்றார்கள்.

ஆனால் திருக்குர்ஆன் இதை அபத்தமான, ஆபத்தான கொள்கை என்று குறிப்பிடுகின்றது. காரணம், இது அவனது தனித்தன்மையை கேலிக் கூத்தாக்கி விடுகின்றது. காணும் பொருளெல்லாம் கடவுள் என்றால் அவற்றிற்கு ஏன் அழிவு ஏற்படுகின்றது? என்ற பல்வேறு விதமான கேள்விகள் எழுகின்றன.

இந்த அபத்தத்திற்கும் அர்த்தமற்ற உளறலுக்கும் நேர்மாற்றமாக, படைத்த இறைவன் வானத்திற்கு மேல் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான், அங்கிருந்து அவன் ஆட்சி செலுத்துகின்றான் என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

(திருக்குர்ஆன் : 7: 54.) 

وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ۚ

அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும்.

(திருக்குர்ஆன் : 2:255.) 

اَللّٰهُ الَّذِىْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا‌ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

(திருக்குர்ஆன் : 13:2.) 

அந்த இறைவன் நமக்கு மேல் அமைந்திருக்கும் வானங்களுக்கு மேல் இருக்கின்றா     ன்.

67:16 ءَاَمِنْتُمْ مَّنْ فِىْ السَّمَآءِ اَنْ يَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِىَ تَمُوْرُۙ‏ 67:17 اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَآءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا‌ ؕ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ‏

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல்மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா?

(திருக்குர்ஆன் : 67:16,17.)