Tamil Bayan Points

19) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-19

நூல்கள்: எச்சரிக்கையூட்டும் நபிமொழி

Last Updated on October 13, 2023 by

19) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-19

நபிமொழி-91

உருவப்படம் 

قَالَ: ” أَمَا عَلِمْتِ أَنَّ المَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، وَأَنَّ مَنْ صَنَعَ الصُّورَةَ يُعَذَّبُ يَوْمَ القِيَامَةِ يَقُولُ: أَحْيُوا مَا خَلَقْتُمْ

உருவப் படம் உள்ள வீட்டிற்குள் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தை வரைந்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும், நீ படைத்தவற்றுக்கு உயிர் கொடு’ என்று அல்லாஹ் சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி-3224


நபிமொழி-92

துன்பம் தரும் வேதனை உண்டு

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ – قَالَ أَبُو مُعَاوِيَةَ: وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ – وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: شَيْخٌ زَانٍ، وَمَلِكٌ كَذَّابٌ، وَعَائِلٌ مُسْتَكْبِرٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமையில் மூன்று நபர்களிடம் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.

  1. விபச்சாரம் செய்யும் கிழவன்.
  2. பொய் சொல்லும் ஆட்சியாளன்.
  3. பெருமையடிக்கும் ஏழை.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-172.


நபிமொழி-93

கவிதை

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ أَحَدِكُمْ قَيْحًا يَرِيهِ، خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவனது வயிறு கவிதையால் நிரம்பி இருப்பதை விடப் புரையோடும் சீழ் சலத்தால் நிறைந்து இருப்பதே மேல். 

அறிவிப்பவர்: சஅத் (ரலி)

நூல்: புகாரி-654, முஸ்லிம் 4547


நபிமொழி-94

சகோதரத்துவம் 

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا» وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ «بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ»

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார் அவர் தம் சகோதரருக்கு அநீதி இழைக்க வேண்டாம், துரோகம் இழைக்க வேண்டாம்., அவரைக் கேவலப்படுத்த வேண்டாம் இறையச்சம் இங்கே இருக்கிறது”. எனக் கூறி நெஞ்சை மூன்று முறை சுட்டிக் காட்டினார்கள் “சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவது தீமைக்கு போதிய ஆதாரமாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள். மானம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-5010, புகாரி 544