Tamil Bayan Points

19) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-19

நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழி

Last Updated on October 24, 2023 by

19) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-19

நபிமொழி-91

குழந்தைகளைக் கொஞ்சுவோம்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ هِشَامٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَ أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَة

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கடம் வந்து, நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி-5998


நபிமொழி-92

நட்பு

قَالَ لِىَ النَّبِىُّ -صلى الله عليه وسلم لاَ تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பது உட்பட எந்த ஒரு நல்லகாரியத்தையும் அற்பமாக நினைத்துவிடாதே.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : முஸ்லிம்-4760


நபிமொழி-93

முஹர்ரம் மாத நோன்பு 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسَلَّمَ

أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ *رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ் வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை ஆகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்-2157


நபிமொழி-94

மீசை கத்தரித்து தாடி வைப்பது 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جُزُّوا الشَّوَارِبَ، وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம்-435


நபிமொழி-95

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை 

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன? என ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ உண்ணும் போது அவளுக்கும் உணவளி, நீ அணியும் போது அவளுக்கும் அணியச் செய், அவளை முகத்தில் அடிக்காதே, இழிவான வார்த்தைகளால் அவளை ஏசாதே. (தனிமையில்) வீட்டிற்கு உள்ளே தவிர அவளைக் கண்டிக்காதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி)

நூல் : இப்னுமாஜா-1840