Tamil Bayan Points

17) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-17

நூல்கள்: எச்சரிக்கையூட்டும் நபிமொழி

Last Updated on May 2, 2024 by Trichy Farook

17) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-17

நபிமொழி-81

காவி இறைமறுப்பாளர்களின் ஆடை 

رَأَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا»

நான் இரு காவி நிற ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டு இவை காஃபிர்களின் ஆடையாகும். இதை நீ அணியாதே என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம்-4218


நபிமொழி-82

திட்டுவது  பாவமாகும் 

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«الْمُسْتَبَّانِ مَا قَالَا فَعَلَى الْبَادِئِ، مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருவர் திட்டிக் கொள்ளும் போது முதலில் திட்ட ஆரம்பித்தவரே குற்றவாளி, அநீதி இழைக்கப்பட்டவர் வரம்பு மீறாத வரை. 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-5046 


நபிமொழி-83

நரகத்தில் அக்கிரமக்காரர்கள் நுழைவர்

சொர்க்கத்தில் அப்பாவிகள் நுழைவர்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَّتِ النَّارُ، وَالْجَنَّةُ، فَقَالَتْ: هَذِهِ يَدْخُلُنِي الْجَبَّارُونَ، وَالْمُتَكَبِّرُونَ، وَقَالَتْ: هَذِهِ يَدْخُلُنِي الضُّعَفَاءُ، وَالْمَسَاكِينُ

நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன அக்கிரமக்காரர்களும் பெருமை அடிப்பவர்களும் எனக்குள் நுழைவார்கள்’ என்று நரகம் சொன்னது. ‘எளியவர்களும் ஏழைகளும் எனக்குள் நுழைவார்கள் என்று சொர்க்கம் சொன்னது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-5469


நபிமொழி-84

விளம்பரத்திற்காக செய்தல் 

قَالَ: سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ: – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهُ، فَدَنَوْتُ مِنْهُ، فَسَمِعْتُهُ يَقُولُ: – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ»

 

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகப்புகழ்ச்சிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)

நூல்: புகாரி-6499, முஸ்லிம்-570, 


நபிமொழி-85

சொர்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ، مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகவாசிகளில் இரு கூட்டத்தார் உள்ளனர். அவ்விரு கூட்டத்தாரையும் நான் பார்த்ததில்லை பசு மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடிக்கும் கூட்டத்தார் மெல்லிய உடை அணிந்து, தம் தோள்களைச் சாய்த்து நடந்து, கவனத்தை ஈர்க்கும் பெண்கள். சரிந்து நடக்கும், கழுத்து நீண்ட ஒட்டகத்தின் திமிலைப் போன்று அவர்களின் தலை இருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக் கொண்டிருக்கும்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-5487