Tamil Bayan Points

16) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-16

நூல்கள்: எச்சரிக்கையூட்டும் நபிமொழி

Last Updated on May 2, 2024 by Hakkeem

16) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-16

நபிமொழி-76

இறைநம்பிக்கையாளன் அல்லன்

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً، يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ»

விபச்சாரம் செய்யும் போது ஒருவன் இறைநம்பிக்கையாளனாக இருப்பதில்லை. திருடும் போது ஒருவன் இறைநம்பிக்கையாளனாக இருப்பதில்லை. மது அருந்தும் போது ஒருவன் இறை நம்பிக்கையாளனாக இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “மக்களின் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் போது ஒருவன் இறைநம்பிக்கையாளனாக இருப்பதில்லை” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-2475, முஸ்லிம்-100,101,


நபிமொழி-77

பேசினால் நல்லதை மட்டும் பேசுவோம் 

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَنْ كانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيصْمُتْ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர் நல்லதை பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர் தன் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-74, புகாரி 6018


நபிமொழி-78

இணைவைப்போருக்கு மாறு செய்யுங்கள்

 قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ، وَأَوْفُوا اللِّحَى»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணைவைப்போருக்கு மாறு செய்யுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை விட்டு விடுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம்-434


நபிமொழி-79

இறைமறுப்பில் சேர்க்கும் இரு குணங்கள் 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ: الطَّعْنُ فِي النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடம் உள்ள இரு குணங்கள் குஃப்ராகும்:

  1. பரம்பரையைப் பழிப்பது
  2. இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-121


நபிமொழி-80

தலை முடிக்குச் சாயம் பூசுதல் 

إِنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «إِنَّ اليَهُودَ، وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ، فَخَالِفُوهُمْ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிக்கு) சாயம் பூசுவதில்லை. நீங்கள் அவர்களுக்கு மாறு, செய்யுங்கள்

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-3462