Tamil Bayan Points

10) 105 – அல் ஃபீல் (யானை)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

Last Updated on March 22, 2023 by

105 – அல் ஃபீல் (யானை)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِؕ‏
2: اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِىْ تَضْلِيْلٍۙ‏
3: وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ‏
4: تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍۙ‏
5: فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ‏

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)அலம்(TH)தர (K)கய்ஃப ஃபஅல ர(B)ப்பு(K)க (B)பிஅஸ்ஹா(B)பில் ஃபீல்

2)அலம் யஜ்அல் கய்(D)தஹும் ஃபீ தள்லீல்

3)வஅர்ஸல அலைஹிம் (TH)தய்ரன் அ(B)பா(B)பீல்

4)(TH)தர்மீஹிம் (B)பிஹிஜார(TH)திம் மின் ஸிஜ்ஜீல்

5)(F)ஃபஜஅலஹும் (K)கஅஸ்(F)ஃபிம் மஃ(K)கூல்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?

2. அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா?

3. அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.

4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.

5. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

ஆங்கில பொழிபெயர்ப்பு 

105. AL – FEEL – THE ELEPHANT
In the name of God, the Gracious, the Merciful.
1. Have you not considered how your Lord dealt with the People of the Elephant?
2. Did He not make their plan go wrong?
3. He sent against them swarms of birds.
4. Throwing at them rocks of baked clay.
5. Leaving them like chewed-up leaves.

Al’Quran : 105 : 1-5