Tamil Bayan Points

10) கடவுளின் தோல்வி

நூல்கள்: இது தான் பைபிள்

Last Updated on February 24, 2022 by

யுஅ) கடவுளின் தோல்வி

மோசேக்குப் பின்னர் யோசுவா இஸ்ரவேலர்களின் தலைமைப் பொறுப்பேற்றதாகவும், அனைத்து இராஜாக்களையும் தோல்வியுறச் செய்து அவர்களின் நாடுகளைப் பிடித்துக் கொண்டதாகவும் யோசுவா ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.

 … எருசலேமின் ராஜா, எப்ரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீஷின் ராஜா, எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களையும் குகையிலிருந்து அவனிடம் கொண்டு வந்தார்கள்.

யோசுவா 10:23

அதன் பின் யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான்.

யோசுவா 10:26

எருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர் மாண்டதும் கூறப்படுகின்றன.

ஆனால் இதே ஆகமம் 15:63 வசனத்தைப் பாருங்கள்!

எருசலேமில் குடியிருந்து எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிட முடியாமற் போயிற்று. இந்நாள் மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

யோசுவா 15:53

யோசுவா உள்ளிட்ட யூதாவின் புத்திரர்கள் எருசலேமை முறியடித்ததாகக் கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா? அல்லது அவர்களை வெல்ல முடியாமற் போயிற்று என்று கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா?

கர்த்தரின் துணையுடன் கர்த்தரே நேரடியாகக் களத்தில் இறங்கியும் (யோசுவா 10:42) எருசலேமுள்ளவர்களை வெல்ல முடியவில்லை என்றால் தோல்வி கர்த்தருக்கில்லையா? இவற்றுக்கும் கிறித்தவ உலகில் விடையில்லை.

யுn) உதைக்கும் கணக்குகள்

i) யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்தில் அகீயாவின் குமாரனாகிய பாஷா இஸ்ரவேல் அனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் அரசாண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 15:33

பாஷா நித்திரையடைந்து தன் பிதாக்களோடே சேரவே திரிசாவில அடக்கம் பண்ணப்பட்டான். அவன் குமாரன் ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

இரண்டாம் ராஜாக்கள் 16:6

ஆசா என்பவன் யூதாவுக்கு ராஜாவாகிய மூன்றாம் வருஷத்தில் பாஷா என்பவன் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவானதாகவும், 24 ஆண்டுகள் ஆண்டதாகவும் மேலே உள்ள முதல் வசனம் கூறுகின்றது. அவன் அரசனாகவே மரணமடைந்து உடன் அவன் மகன் ராஜாவாக ஆனதாக இரண்டாம் வசனம் கூறுகின்றது.

யூதாவுக்கு ஆசா ராஜாவான மூன்றாம் வருஷம் பாஷா ஆட்சிக்கு வந்து 24 வருடங்கள் ஆட்சி செய்து மரணித்திருக்கிறான்.

அதாவது ஆசா யூதாவுக்கு ராஜாவானது முதல் 27 (24+3) ஆண்டுகள் பாஷா வாழ்ந்திருக்கிறான். இதைக் கவனத்தில் கொண்டு பின்வரும் வசனங்களைப் படியுங்கள்!

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவிடம் போக்குவரத்தாயிராத படி ராமாவுக்கு அரண் கட்டினான்.

இரண்டாம் நாளாகமம் 16:1

ஆசா அரசாண்ட 27ஆம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான்? ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா? அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது?

ii) சாலமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தனக்கு ஒரு அரண்மனையையும் கட்டக் கட்டளையிட்டு சுமை சுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலையில் கல்வெட்டுதற்கு எண்பதினாயிரம் பேரையும் இவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு மூவாயிரத்து அறுநூறு பேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.

இரண்டாம் நாளாகமம் 2:2

சாலமோன் அரண்மனை கட்டும் போது அதனை மேற்பார்வையிடுவதற்காக மூவாயிரத்து அறுநூறு பேரை ஏற்படுத்தியதாக இவ்சவனம் கூறுகிறது. இது உத்தேசமான கணக்கு அன்று; சாலமோன் எண்ணிப் பார்த்து ஏற்படுத்திய சரியான கணக்கு எனவும் இவ்வசனம் கூறுகிறது. இதே வசனத்தை முதலாம் ராஜாக்கள் பின்வருமாறு கூறுகின்றது.

… இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைப் பார்த்துக் கொள்வதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முன்னூறு பேர் இருந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 5:16

துல்லியமாக எண்ணி நியமிக்கப்பட்டவர்களில் ஏனிந்த முரண்பாடு? சாலமோன் எண்ணிக்கையில் தவறு செய்து விட்டாரா? அல்லது அந்த இரண்டு ஆகமங்களையும் கர்த்தரின் தூண்டுதலினால் எழுதிய(?) இருவரில் ஒருவர் தவறான எண்ணிக்கையைக் குறிப்பிட்டு விட்டாரா? இரண்டு எண்ணிக்கையில் எது உண்மை என்றாலும் பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.

 iii) சாலமோன் கட்டிய  கடல் தொட்டி என்ற தடாகத்தின் கொள்ளளவு பற்றி பைபிளின் இரண்டு ஆகமங்கள் முரண்பட்ட அளவைக் கூறுகின்றன.

…அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

முதலாம் ராஜாக்கள் 7:26

அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

இரண்டாம் நாளாகமம் 4:5

 பாபிலோன் ராஜாவாகிய நெபுகாத் நேச்சார் என்பவரால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களும், பல பட்டணங்களுக்கு அனுப்பப்பட்டவர்களுமான இஸ்ரவேலர்களின் தொகையை எஸ்ரா, நெகேமியா ஆகிய இரண்டு ஆகமங்கள் கூறுகின்றன. இரண்டு ஆகமங்களின் பட்டியல்களிலும் ஏராளமான முரண்பாடுகள்!

எஸ்ராவின் இரண்டாம் அதிகாரத்திலும் நெகேமியாவின் இரண்டாம் அதிகாரத்திலும் நெகேமியாவின் ஏழாம் அதிகாரத்திலும் இந்தப் பட்டியலைக் காணலாம்.

பட்டியல்                                      எஸ்ரா                        நெகேமியா

ஆரகின் சந்ததியர்                       775                           652

பகத், மோவாபின்                       2812                         2318

சத்தூவின் சந்ததியர்                   945                           845

பெபாயீன் சந்ததியர்                   629                           628

பாணியின் சந்ததியர்                  642                           648

அஸ்காதின் சந்ததியர்                1222                         2322

அதொனிகாமின் சந்ததியர்      666                           667

பிக்வாயின் சந்ததியர்                 2056                         2067

ஆதினின் சந்ததியர்                    454                           665

பேத்சாயின் சந்ததியர்                323                           324

காசூமின் சந்ததியர்                    223                           328

செனாவின் சந்ததியர்                3630                         3930

இரண்டு ஆகமங்களும் இப்படி பல முரண்பாடுகள் கொண்ட பட்டியலைக் கூறுகின்றன. கர்த்தருடன் கடுகளவும் சம்பந்தப்படாத – கேள்விப்பட்டவைகளை எழுதிவிடக் கூடிய – மிகவும் சாதாரண மக்களால் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே இவ்வளவு முரண்பாடு இருக்க முடியும். இறைவேதமாக நம்புவது ஒரு புறமிருக்கட்டும். நம்பத் தகுந்த வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகக் கூட நம்ப முடியாத அளவுக்கு முரண்பாடுகள்.

iஎ) ஆகாஸ் ராஜாவான போது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாரு வருஷம் அரசாண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 16:2

ஆகாஸ் நித்திரையடைந்து தன் பிதாக்களோடு சேரவே தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணப்பட்டான். அவன் குமாரன் எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்

இரண்டாம் ராஜாக்கள் 16:20

இந்த இரண்டு வசனங்களும் கூறுவதைக் கவனமாகப் படியுங்கள்! ஆகாஸ் என்பவன் மரணித்தவுடன் அவனது மகன் எசேக்கியா ராஜாவானதாகவும், ஆகாஸ் என்பவன் இருபது வயதில் ராஜாவாகி பதினாறு ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகவும் கூறுகின்றன. அதாவது தன் முப்பத்தாறாம் வயதில் (20+16) ஆகாஸ் மரணித்திருக்கிறான். அவன் மரணித்தவுடன் அவனது மகன் எசேக்கியா ராஜாவாயிருக்கிறான்.

இந்த விபரங்களைப் பதிய வைத்துக் கொண்டு பின்வரும் வசனத்தைப் படியுங்கள்!

ஆகாஸ் எனும் யூதா ராஜாவின் குமாரன் எசக்கியா ராஜாவானான். அவன் ராஜாவான போது அவனுக்கு இருபத்தி ஐந்து வயது.

இரண்டாம் ராஜாக்கள் 18:2

முப்பத்தி ஆறு வயதில் மரணித்த ஒருவனுக்கு அவன் மரணித்த சமயத்தில் இருபத்தி ஐந்து வயதில் மகன் இருப்பது எப்படிச் சாத்தியமாகும்?

முப்பத்தி ஆறு வயதில் மரணித்தவனுக்கு இருபத்தி ஐந்து வயதில் மகன் இருக்க வேண்டுமென்றால் அவன் தன் பதினொன்றாம் வயதில் தந்தையாகியிருக்க வேண்டும். 11 வயதில் தந்தையாக இருக்க வேண்டும் என்றால் 10 வயதில் அவன் இல்லற வாழ்வைத் துவக்க வேண்டும். பத்து வயதில் எந்த ஆணும் குழந்தை பெரும் பருவத்தை அடைவதில்லை.

ஒன்று அவன் 36 வயதில் மரணமடைந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவன் மகன் இருபத்தி ஐந்து வயது உடையவனாக இருந்தது பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது பொய் என்றாலும் பைபிளில் பொய் இடம் பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது.

வயது பற்றிக் குறிப்பிடும் போது தவறுதலாக அச்சாகி இருக்கக் கூடும் என்று சமாளிக்க முடியாது. ஏனெனில் மற்றொரு ஆகமத்திலும் இந்த விபரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகாஸ் 36 வயதில் மரணமடைந்த செய்தி இரண்டாம் நாளாகமம் 28:1 இலும் அவரது மகன் 25 வயதில் ராஜாவான செய்தி இரண்டாம் நாளாகமம் 29:1இலும் கூட இடம் பெற்றுள்ளது.

வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இரண்டு ஆகமங்களிலும் ஒரே மாதிரியான தவறுகள் ஏற்பட்டிருப்பதால் எந்தச் சமாதானமும் கூற வழியில்லை. சாதாரண மனிதர்களால் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் ஏற்பட முடியும்.

எ) சாலொமோன் ராஜாவிடம் இருந்த படை பலம் பற்றி முதலாம் ராஜாக்கள், இரண்டாம் நாளாகமம் ஆகிய இரண்டு ஆகமங்களும் கூறுகின்றன.

சாலொமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும், ரதங்களும் இருந்தன. பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.

இரண்டாம் நாளாகமம் 9:25

இரதக் குதிரைகளுக்குரிய லாயங்கள் சாலொமோனுக்கு நாற்பதினாயிரம் இருந்தன. பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 4:26

சாலொமோனுக்கு இருந்த ரதக் குதிரை லாயங்கள் நாலாயிரமா? நாற்பதினாயிரமா?

எi) தாவீது ராஜாவிடம் இருந்த பராக்கிரமசாலிகளைப் பற்றியும் அவர்களது பராக்கிரமம் பற்றியும் பைபிளின் இரண்டாம் சாமுவேல், முதலாம் நாளாகமம் ஆகிய இரண்டு ஆகமங்களும் குறிப்பிடுகின்றன. இறை வேதத்துக்குத் தகாத முரண்பாடுகள் இவ்விரு ஆகமங்களிலும் காணப்படுகின்றன.

தாவீதிடமிருந்த பராக்கிரம வீரர் இவர்களே! தக்கிமோனியனான யோஷேப் பஷேபத் மூவரில் மேலானாவன். இவன் எண்ணூறு பேரை ஒருமிக்க வெட்டி அவர்கள் மேல் வெற்றிக் குறியாக ஈட்டியை ஆட்டினவன்…

இரண்டாம் சாமுவேல் 23:8

தாவீதுக்கு இருந்த அந்த பராக்கிரம வீரரின் இலக்கமாவது; தக்மோனியின் குமாரன் யாஷொபியாம். இவன் முப்பது வீரருக்குத் தலைவன். இவன் முன்னூறு பேரை ஒருமிக்க வெட்டி அவர்கள் மேல் வெற்றிக் குறியாகத் தன் ஈட்டியை ஆட்டினவன்…

முதலாம் நாளாகமம் 11:11

அவன் தன் ஈட்டியை ஆட்டியது எண்ணூறு நபர்கள் மீதா? முன்னூறு நபர்கள் மீதா? இரண்டில் கர்த்தர் சொன்னது எது? கர்த்தரின் பெயரால் உண்டு பண்ணிச் சொன்னது எது?

எii) தாவீது எனும் தீர்க்கதரிசி தனது சேனாதிபதியிடம் இஸ்ரவேல் மக்களின் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்ட ஒரு செய்தியை இரண்டாம் சாமுவேல் என்ற ஆகமமும், முதலாம் தினவர்த்தமானம் (அல்லது முதலாம் நாளாகமம்) என்ற ஆகமமும் குறிப்பிடுகின்றன.

அவரது கட்டளைப்படியே அவரது சேனாதிபதி யோவாப் என்பவர், தாண் என்ற ஊர் முதல் பெயேர்ஷெபா என்ற ஊர் வரையிலுள்ள அத்தனை ஊர்களிலும் சுற்றித் திரிந்து மக்கள் தொகையைக் கணக்கெடுத்து தாவீதிடம் ஒப்படைக்கிறார். இந்தச் செய்தியை மேற்கண்ட இரண்டு ஆகமங்களும் கூறுகின்றன.

இரண்டாம் சாமுவேல் கூறுவதைப் பாருங்கள்:-

யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவினிடம் கொடுத்தான். இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்த வீரர் எட்டு லட்சம் பேர் இருந்தார்கள். யூதாவிலே ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

இரண்டாம் சாமுவேல் 24:9

இதே சம்பவத்தை முதலாம் நாளாகமம் பின்வருமாறு கூறுகிறது.

ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை யோவாப் தாவீதினிடம் கொடுத்தான். இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் எடுக்கத் தக்க வீரர் பதினொரு லட்சம் பேரும் யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்க வீரர் நாலு இலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தார்கள்.

முதலாம் நாளாகமம் 21:5

மக்கள் தொகை குறைவாக இருந்த அந்தக் காலத்தில் அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், பட்டயம் எடுக்கத் தெரியாதவர்கள், ஊனமுற்றவர்கள், பொது மக்கள் நீங்கலாக இவ்வளவு போர் வீரர்கள் வாழ்ந்திருக்க முடியுமா? என்ற சந்தேகத்தை விட்டு விடுவோம்.

பைபிளை இறை வேதம் என்று நம்பும் மக்களிடம் நாம் கேட்பது இது தான்! எட்டு லட்சமா? பதினொரு லட்சமா? நாலு லட்சத்தி எழுபதினாயிரமா?

யோவோப் கணக்கெடுத்து வழங்கிய பட்டியலைப் பற்றி பேசும் இரண்டு ஆகமங்களுமே இறைவனால் வழங்கப்பட்ட வேதம் என்றால் ஏனிந்த முரண்பாடு? முரண்பட்ட இரண்டு தகவல்களும் உண்மையாக இருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளப்பட்ட விதியினடிப்படையில் இவ்விரண்டில் எது உண்மை?

இரண்டில் எதை உண்மை என்று ஏற்றாலும் பொய்யும் பைபிளில் உள்ளதையும் சேர்த்தே ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இரண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகளாக இருக்குமோ? வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாக இருக்குமோ என்றெல்லாம் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.

இரண்டுமே ஒரே காலத்தில் நடந்த ஒரே நிகழ்ச்சி தான். அந்த அதிகாரங்களை முழுமையாகப் பார்வையிட்டு எவரும் உறுதி செய்து கொள்ளலாம்.

யுழ) வாட்டும் பஞ்சம்

மேற்கண்ட இரண்டு ஆகமங்களிலும் உள்ள மற்றொரு முரண்பாட்டைக் கேளுங்கள்!

தாவீதின் காலத்தில்  காத் என்ற ஞானதிருஷ்டிக்காரன் ஒருவன் இருந்ததாக பைபிள் கூறுகிறது. இஸ்ரவேலர்களின் அக்கிரமங்கள் எல்லை மீறிய போது மூன்று விதமான தண்டனைகளில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கர்த்தர், காத் எனும் ஞானதிருஷ்டிக்காரன் மூலமாக தாவீதுக்குச் சொல்லியனுப்புகிறார். இந்தச் செய்தியை மேற்கண்ட இரண்டு ஆகமங்களும் முரண்பட்டுக் கூறுவதைக் கேளுங்கள்!

தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் எனும் தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது. நீ தாவீதிடம் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்வைக்கின்றேன். அவற்றில் ஒன்றைத் தெரிந்து கொள். அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

அப்படியே  காத் தாவீதிடம் வந்து இதை அவனுக்குத் தெரிவித்து உமது தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வர வேண்டுமா? மூன்று மாதம் உமது சத்ருக்கள் உம்மைப் பிடிக்கத் தொடர நீ அவர்களுக்கு முன்பாக ஓடிப் போக வேண்டுமா? அல்லது உமது தேசத்திலே மூன்று நாள் கொள்ளை நோய் உண்டாக வேண்டுமா?

இரண்டாம் சாமுவேல் 24:11,12,13

அப்படியே காத் தாவீதினிடம் வந்து  கர்த்தர் உரைப்பதைக் கேள்! மூன்று வருஷத்துக்குப் பஞ்சம் வர வேண்டுமா? உன் பகைவரின் பட்டயம் உன்னைத் தொடரவே உன் சத்ருக்களால் மூன்று மாதச் சங்காரம் வேண்டுமா?…

முதலாம் நாளாகமம் 21:11,12

 ஏழு வருஷத்துப் பஞ்சமா? மூன்று வருஷப் பஞ்சமா? கர்த்தரின் வார்த்தையில் தடுமாற்றம் வரலாமா? இரண்டு தகவல்களில் எது உண்மை? எது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் உண்மையல்லாத மற்றொரு செய்தி இறை வேதத்தில் இடம்பெறலாமா?

யு) எட்டு வயது ராஜாவுக்குப் பதினெட்டு வயது

யோயாக்கீன் என்பவனைப் பற்றிய வரலாற்றை இரண்டாம் ராஜாக்கள் என்ற ஆகமமும், இரண்டாம் நாளாகமம் என்ற ஆகமமும் குறிப்பிடுகின்றன. அதிலுள்ள முரணைப் பாருங்கள்.

யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்குப் பதினெட்டு வயது. அவன் எருசலேமில் மூன்று மாதம் அரசண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 24:80

யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்கு எட்டு வயது அவன் மூன்று மாதமும் பத்து நாளும் அரசாண்டு…

இரண்டாம் நாளாகமம் 36:9

இங்குள்ள முரண்பாடுகளைக் கவனிப்பதற்கு முன்னால் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யோயாக்கீம் என்பவரின் மகன் யோயாக்கீன். ஒரு எழுத்து தான் வித்தியாசம். மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டாம் ராஜாக்கள் 24:8 வசனத்தில் யோயாக்கீன் என்றே ஆங்கில பைபிள்களிலும் கத்தோலிக்க பைபிளிலும் குறிப்பிடப்படுகின்றது.

ஆயினும் வேதாகமச் சங்கம் 1982ல் வெளியிட்ட பைபிளில் மேற்கண்ட வசனத்தில் யோயாக்கீம் என்று தந்தையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இதனால் மேற்கண்ட வசனங்களில் கூறப்படும் நபர் வெவ்வேறு நபர்கள்; ஒரு நபரல்ல என்று எவரும் வாதிடக்கூடும்.

முன் பின் வசனங்களை வைத்துப் பார்க்கும் போது இரண்டு வசனங்களிலுமே யோயாக்கீன் என்பதே சரியானது என்று விளங்கலாம். இவர் வேறு அவர் வேறு என்று எவரேனும் வாதிட்டால் இரண்டாம் நாளாகமத்தில் 36:5ல் யோயாக்கீம் ராஜாவான போது அவனுக்கு இருபத்தி ஐந்து வயது எனக் கூறப்படுவதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

நாம் கேட்க விரும்புவது யோயாக்கீன் இராஜாவான போது அவனுக்கு பதினெட்டு வயதா? வெறும் எட்டு வயதா? அவன் ஆட்சி செய்தது மூன்று மாதங்களும் பத்து நாட்களுமா? மூன்று மாதங்கள் மட்டுமா? இரண்டில் எது உண்மை?

யுங) தடுமாறும் ஜோடிகள்

நோவாவும், அவரது குடும்பத்தினரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சம்பவத்தை ஆதியாகமம் கூறுகிறது. அந்த ஒரு ஆகமத்திலேயே முரண்பாடு இருப்பதைக் காணமுடிகின்றது.

மாம்சமான சகலவித ஜீவ ஜந்துக்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக் கொள்! ஜாதி ஜாதியான பறவைகளிலும், ஜாதி ஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதி ஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு காக்கப்படுவதற்கு உன்னிடம் வரக்கடவது…

ஆதியாகமம் 6:19,20

பூமியின் மீதெங்குமுள்ள வர்க்கங்களை உயிரோடு காக்கும் பொருட்டு நீ சுத்தமான சகல மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும் ஆகயத்துப் பறவைகளிலும் சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்!

ஆதியாகமம் 7:2,3

 நோவா தன்னுடைய கப்பலில் ஏற்றிச் சென்றது ஒவ்வொரு ஜோடியா? ஏழு ஏழு ஜோடியா? இரண்டில் எது உண்மை?

யுச) அதிசயமாய் தோன்றிய சந்ததி

இவற்றையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடக்கூடிய மற்றொரு முரண்பாட்டைப் பாருங்கள்!

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மிதியானிகளுடன் போர் செய்து சகல ஆண்களையும், கொன்று போட்டார்கள். அவர்களைக் கொன்று போட்டதுமின்றி, மிதியானிகளின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கெம், சூர், குர், ரேபா என்பவர்களையும் கொன்று போட்டார்கள். பெயோரின் குமாரனாகிய பிலேயாமையும் கொன்று போட்டார்கள்.

அன்றியும் இஸ்ரவேலர் மிதியானிகளின் ஸ்திரீகளையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து அவர்கள் ஆடு, மாடுகள் யாவையும் சகல பொருட்களையும் கொள்ளையிட்டு அவர்கள் குடியிருந்த சகல ஊர்களையும், அவர்கள் பாளையங்கள் அனைத்தையும் அக்கினியால் சுட்டெரித்துத் தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த ஆட்கள், மிருகங்கள் அனைத்தையும் சேர்த்துச் சிறைப் பிடித்தவர்களையும் தாங்கள் பிடித்தவைகளையும் கொள்ளையிட்டவைகளையும் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அக்கரையில் மோவோபின் சமவெளிகளில் பாளையத்திலிருந்த மோசேயினிடத்துக்கும் ஆசாரியனாகிய எலியாசாரியினடத்துக்கும் இஸ்ரவேல் சபையாரிடத்துக்கும் கொண்டு வந்தார்கள். மோசேயும் ஆசாரியனாகிய எலியாசாரும் சபையின் பிரபுகள் எல்லோரும் அவர்களைச் சந்திக்கப் பாளையத்திற்கு வெளியே எதிர்கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரத்துக்குத் தலைவரும் நூற்றுக்குத் தலைவருமாகிய சேனாதிபதிகள் மேல் கடுங்கோபம் கொண்டு அவர்களிடம் பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா? பெயோரின் சந்ததியில் பிலெயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேலர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள் தானே? அதனால் கர்த்தரின் சபையில் வாதையும் நேரிட்டதே. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷ சம்போகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்! ஸ்திரீகளில் புருஷ சம்போகத்தை அறியாத எல்லாப் பெண் குழந்தைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்!… என்று சொன்னார்.

எண்ணாகமம் 31:7-18

மோசே எனும் தீர்க்கதரிசி பச்சிளங்குழந்தைகளையும் பெண்களையும் கூடக் கொல்லுமாறு கூறியிருப்பாரா? அதுவும் கடவுளின் பெயரால் இதைக் கூறியிருப்பாரா? என்பதை நாம் இங்கே ஆட்சேபிக்கப் போவதில்லை.

சிவிலியன்கள் மீது குண்டு மழை பொழியும் கொடிய ஃபாஸிஸ்டுகளான அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இது முன் மாதிரியாக இருந்து விட்டுப் போகட்டும்! முரண்பாட்டைச் சுட்டிக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம்.

இஸ்ரவேலர்கள் மிதியானியர் என்ற இனத்தவரின் அனைத்து ஆண்களையும் ஆண் குழந்தைகள் அனைவரையும் கொன்று போட்டார்கள். அது மட்டுமின்றிப் புருஷ – சம்போகத்தை அறிந்த – (அந்தக் காலத்தில் இதை எப்படிக் கண்டுபிடித்தார்களோ-) அனைத்துப் பெண்களையும் கூட கொன்று விட்டனர். இதனால் கருவில் ஆண் குழந்தை இருந்து அது பிறகு பிறப்பதற்கும் இடமேயில்லை.

சுருங்கச் சொல்வது என்றால் மிதியானியர் என்ற இனமே பூண்டோடு ஒழிந்தது. அந்த இனத்தில் ஒரு மனிதன் கூடத் தோன்ற இனி வழியே இல்லை. இந்த விபரங்களை மேலே கண்ட வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்கின்றன. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்!

பின்னும் இஸ்ரவேலர் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்யவே கர்த்தர் அவர்களை ஏழு வருடம் மிதியானியர் கையில் ஒப்புக் கொடுத்தார்.

நியாயாதிபதிகள் 6:1

இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடு, மாடு, கழுதைகளையாகிலும் விட்டு வைப்பதில்லை. அவர்கள் தங்கள் மிருகங்களோடும், தங்கள் கூடாரங்களோடும் வெட்டுக் கிளிகளைப் போல் திரளாய் வருவார்கள். அவர்களும் அவர்களின் ஒட்டகங்களும் எண்ணி முடியாததாயிருக்கும்.

நியாயாதிபதிகள் 6:5

ஆண் வர்க்கமே அடியோடு அழிந்துவிட்ட ஒரு சமுதாயம் திரும்பவும் எப்படி உருவாக முடியும்? எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் எப்படிப் பெருக முடியும்? கர்த்தர் வானிலிருந்து மிதியானியர் எனும் இனத்தவரை இறக்கினாரா? அல்லது கொல்லப்பட்டவர்களுக்குத் திரும்பவும் உயிர் கொடுத்தாரா? கடுகளவு அறிவிருந்தால் கூட இதை நம்ப முடியாதே!

ஆண்கள் இல்லாவிட்டால் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு சமுதாயம் திரும்பவும் உருவாக முடியாது. இங்கே இருநூறு ஆண்டுகளில் இந்த விந்தை நடந்துள்ளது.

மோசேவுக்குப் பின் யோசுவா, யூதா, ஒத்னியேல், ஏகூத் ஆகிய நான்கு தீர்க்கதரிசிகளே வந்துள்ளனர். இந்தக் காலகட்டம் ஏறத்தாழ 200 ஆண்டுகளே. இந்த 200 ஆண்டுகளுக்குள் அவர்கள் எண்ண முடியாத அளவுக்கு வளர்வது என்றால் விந்து வங்கியும், செயற்கை முறைக் கருவூட்டலும் அன்றைக்கு இருந்தது என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா?

யுள) செத்துவிட்ட மலடி பெற்றுவிட்ட பிள்ளைகள்

யாரேனும் செத்த பின்பு பிள்ளை பெற முடியுமா? முடியும் என்று பைபிள் கூறுகின்றது. மீகாள் என்பவள் மரணமடையும் வரை பிள்ளை பெறாமல் இருந்துவிட்டு மரணித்த பின் ஐந்து பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள். இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

இரண்டாம் சாமுவேல் 6:23

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சில்லாயின் குமாரன் ஆதரியேலுக்குப் பெற்ற ஐந்து குமாரரையும் பிடித்து…

இரண்டாம் சாமுவேல் 21:8

ஒரு ஆகமத்துக்குள்ளேயே இவ்வளவு பெரிய குழப்பம். கிறித்தவ நண்பர்களே! இதன் பிறகும் பைபிளை இறைவேதம் என்று நம்ப முடியுமா?

யுவ) இரு தாய் பெற்ற ஒரே பிள்ளை

 …அபீயா யூதாவின் மேல் ராஜாவாகிய மூன்று வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள். அவள் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தி.

இரண்டாம் நாளாகமம் 13:1,2

இந்த பைபிள் வசனம் அபீயா என்பவனின் தாயார் யார் எனக் கூறுகின்றது. ஊரியேலின் மகள் மிகாயாள் என்பதே அவனுடைய தாயாரின் பெயர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.

இதே ஆகமத்தில் வேறொரு இடத்தில் அவனது தாய்க்கு வெறு பெயர் கூறப்படுகின்றது.

(ரெகோபெயாம்) அவளுக்குப் பிறகு, அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம் பண்ணினான். அவள் அவனுக்கு அபீயா, அத்தாயி, சிசா, ஷொலாமீத் என்பவர்களைப் பெற்றாள்.

இரண்டாம் நாளாகமம் 11:19

 இந்த வசனம் அபீயா என்பவன் மாகாள் என்பளின் குமாரன் என்று கூறுகின்றது. அபீயா என்பவன் மாகாளின் மகனா? மிகாயாளின் மகனா? இரண்டும் ஒரு பெண்ணுக்குரிய இரண்டு பெயர்கள் என்றெல்லாம் சமாளிக்க முடியாது. ஏனெனில் மாகாளின் தந்தை அப்சலோம் என்றும், மிகாயளின் தந்தை ஊரியல் என்றும் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இரண்டு தந்தையர்களுக்குப் பிறந்தவர்கள் ஒருவராக இருக்க முடியாது. ஒருவனுக்கு இரண்டு  தாய்கள் இருக்கும் அதிசயத்தைப் பைபிளில் தான் காண முடியும்.

மேற்கண்ட 11:19 வசனம் இன்னொரு வசனத்துடனும் முரண்படுகின்றது. அதாவது மாகாள் என்பவள் அப்சலோம் என்பவனின் மகள் என இவ்வசனம் கூறுகின்றது.

அப்சலோமுக்கு மூன்று குமாரரும் தாமார் என்று பெயர் கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்தார்கள்.

இரண்டாம் சமுவேல் 14:27

அப்சலோம் என்பவனுக்குத் தாமார் என்று ஒரு மகள் மட்டும் இருந்தததாக இவ்வசனம் கூறும் போது, முந்தைய வசனம் மாகாள் என்ற திடீர் மகளை அறிமுகம் செய்கிறது.

முரண்பாடுகளின் மொத்த உருவமே பைபிள் தான் என்று முடிவு செய்யுமளவுக்கு மலிந்து கிடக்கும் முரண்பாடுகளையும் கண்டோம்.