Tamil Bayan Points

09) அன்பளிப்புச் செய்வதில் முதலிடம்

நூல்கள்: அண்டை வீட்டார் உரிமைகள்

Last Updated on August 10, 2023 by

09) அன்பளிப்புச் செய்வதில் முதலிடம்

ஒருவருக்கு மட்டுமே அன்பளிப்புச் செய்யமுடியும், குறைவான பொருட்களே இருக்கிறது என்றால் அண்டைவீட்டாரில் நம் வீட்டு வாசலுக்கு யார் பக்கத்தில் இருக்கிறாரோ அவருக்கு வழங்க வேண்டும்.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قُلْتُ
يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي؟ قَالَ: «إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا»

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு என்றார்கள்

அறிவிப்பவர் : ஆயிவஷா (ரலி)

நூல் : புகாரி-2259