Tamil Bayan Points

07) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-7

நூல்கள்: எச்சரிக்கையூட்டும் நபிமொழி

Last Updated on October 13, 2023 by

07) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-7

நபிமொழி-31

கருத்து முரண்பாடு

قَالَ هَجَّرْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، قَالَ: فَسَمِعَ أَصْوَاتَ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ، فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ، فَقَالَ: «إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ، بِاخْتِلَافِهِمْ فِي الْكِتَابِ»

ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாக சண்டையிட்டுக் கொண்ட இருவரின் சப்தத்தைக் கேட்டு தமது முகத்தில் கோபம் தென்பட நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். “உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்து போயினர்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம்-5180


நபிமொழி-32

பிதத்கள் வழிகேடாகும் 

فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ» ثُمَّ يَقُولُ: «أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ، مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ وَعَلَيَّ».

கருத்துக்களில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் ஆகும் வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டல் ஆகும் செயல்களில் தீயவை புதிதாக உண்டாக்கட்படுபவை. ஒவ்வொரு புதுமையும் வழிகேடே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம்-1573


நபிமொழி-33

தாம் விரும்பும் ஒன்றே பிறருக்கும் விரும்புதல் 

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை ஒருவர் இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி-13, முஸ்லிம் 71


நபிமொழி-34

வியாபாரத்தில் சத்தியம் செய்தல் 

رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ، فَإِنَّهُ يُنَفِّقُ، ثُمَّ يَمْحَقُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்ய வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன், அது விற்க உதவும், பின்னர் அழித்துவிடும்

அறிவிப்பவர்: அபூ கத்தாதா (ரலி)

நூல்: முஸ்லிம்-3284


நபிமொழி-35

பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை  

رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاتَّقِ دَعْوَةَ المَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.’

அறிவிப்பவர்:  இன்னு அபாஸ் (ரலி)

நூல்: புகாரி-1496