Tamil Bayan Points

05) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-5

நூல்கள்: எச்சரிக்கையூட்டும் நபிமொழி

Last Updated on October 13, 2023 by

05) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-5

நபிமொழி-21

பெண்களைப் போன்று நடந்துகொள்பவர்(களான அலி)களை வீட்டிலிருந்து வெளியேற்றுதல்.

حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ، وَقَالَ: «أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ» قَالَ: فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا

நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள்.

மேலும், ‘அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி-5886.


நபிமொழி-22

நம்மை சார்ந்தவர் அல்ல 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالقُرْآنِ»، وَزَادَ غَيْرُهُ: «يَجْهَرُ بِهِ»

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர்.

மற்றோர் அறிவிப்பில், ‘இராகமிட்டு உரத்த குரலில் ஓதாதவர்கள் எனக் கூடுதலாக வந்துள்ளது.

அறிவிப்பவர் : என அபூ ஹுரைரா(ரலி)

நூல் : புகாரி-7527


நபிமொழி-23

கடைத்தெருவில் கூச்சலிடுவதற்கு தடை 

 قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِيَّاكُمْ وَهَيْشَاتِ الْأَسْوَاقِ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கடைத்தெரு(வில் கூச்சலிடுவதைப் போன்று) கூச்சலிடுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) 

நூல் : முஸ்லிம்-740


நபிமொழி-24

திருட்டு குற்றம் 

 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ السَّارِقَ، يَسْرِقُ البَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைக் திருடுகிறான்; அதற்காக அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) 

நூல் : புகாரி-6799


நபிமொழி-25

சத்தியம் செய்தல் 

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «أَلاَ مَنْ كَانَ حَالِفًا فَلاَ يَحْلِفْ إِلَّا بِاللَّهِ»

‘சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)

நூல் : புகாரி-3836.