Tamil Bayan Points

01) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-1

நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழி

Last Updated on October 24, 2023 by

01) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி

நபிமொழி-01

நோன்பு விரைவாக திறத்தல் 

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விரைவாக நோன்பு திறக்கும் மக்கள் நன்மையிலேயே இருப்பார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல் : புகாரி-1957


நபிமொழி-02

சஹர் பாங்கு 

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِنَّ بِلاَلًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»

ரமலானில் விடிவதற்கு முன்) இரவிலே பிலால் பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி-617


நபிமொழி-03

மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத்

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«صَلُّوا قَبْلَ صَلاَةِ المَغْرِبِ»، قَالَ: «فِي الثَّالِثَةِ لِمَنْ شَاءَ كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً»

நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப் முன் (சுன்னத்) தொழுது கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். ‘யார் விரும்புகிறாரோ” என்று மூன்றாம் முறை சேர்த்து சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி)

நூல் : புகாரி-1183


நபிமொழி-04

தும்பினால்…

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தும்மினால் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள்.

(இதைக் கேட்ட) உங்கள் சகோதரர் அல்லது நண்பர் யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை
புரியட்டும்) என்று பதிலளிக்கட்டும்.

அவர் ‘யர்ஹமுக்கல்லாஹ்’

என்று பதிலளித்தால், நீங்கள் ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் காரியங்களைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி-6224


நபிமொழி-05

கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதல் 

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
«مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا، غَيْرَ فَرِيضَةٍ، إِلَّا بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ

ஒரு முஸ்லிமான அடியார் ஒவ்வொரு நாளும் கடமையான தொழுகைகள் தவிர கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதால் “அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எழுப்புகிறான்” அல்லது “அவருக்காகச் சொர்க்கத்தில் ஓர் இல்லம் எழுப்பப்படுகிறது”. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி)

நூல் : முஸ்லிம்-1321