Tamil Bayan Points

வரலாறு

நூல்கள்: திருக்குர்ஆன் பொருள் அட்டவணை

Last Updated on December 8, 2019 by

வரலாறு

ஆதம் (அலை)

ஆதம் (அலை) மண்ணால் படைக்கப்பட்டார்

3:59, 6:2, 7:12, 15:26 15:28, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 49:13, 55:14

அவரிலிருந்து அவரது பெண்துணையை இறைவன் படைத்தான் -4:1, 7:189, 39:6

ஆதம் (அலை) இறக்கப்பட்டது மக்காவில் தான் – 3:96

ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டார் – 2:30

அனைத்தையும் அவருக்கு இறைவன் கற்றுக் கொடுத்தான் – 2:31

வானவர்களின் ஆட்சேபணை – 2:30

ஆதம் (அலை) வானவர்களை வென்றார் – 2:31-33

வானவர்கள் பணிந்தனர் – 2:34, 7:11, 15:29, 15:30, 18:50, 20:116, 38:72, 38:73

இப்லீஸ் பணிய மறுத்தான் – 2:34, 7:11, 15:33, 18:50, 20:116

ஆதம் (அலை) சொர்க்கத்தில் குடியமர்த்தப்பட்டார் – 2:35, 7:19

ஷைத்தான் வழிகெடுத்தான் – 2:36, 7:20, 7:27, 20:120

ஆதமுக்கு ஜோடி – 2:35, 7:19

தடை செய்யப்பட்ட மரம் – 2:35, 7:19, 7:20, 7:22, 20:120

இருவரும் வெளியேற்றப்பட்டனர் – 2:36, 2:38, 7:24, 20:123

ஆதம் (அலை) மன்னிக்கப்பட்டார் – 7:23, 20:122

ஆதம் (அலை) மிகச் சிறந்தவர் – 3:33

ஆகு எனும் கட்டளையால் ஆதம் (அலை) உருவானார் – 3:59

ஆதம் (அலை) அனைத்து மனிதர்களின் தந்தை – 4:1, 6:98, 7:189, 39:6, 49:13

ஆதம் (அலை) தடையை மீறினார் – 2:36, 7:22, 20:121

ஆதமின் சந்ததிகளிடம் உடன்படிக்கை – 7:172

ஆதமிடம் மன உறுதியில்லை – 20:115

ஆதம் (அலை) பாவம் செய்தார் – 20:121

இத்ரீஸ் இத்ரீஸ் (அலை) – 19:56,57, 21:85

மூஸா (அலை)

மூஸாவை அவரது எதிரியான ஃபிர்அவ்ன் எடுத்து வளர்த்தான் – 20:38-40, 26:18, 28:7,8,9, 28:12,13

மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான் – 2:253, 4:164, 7:143,144, 19:52, 20:11-24, 27:9

மூஸா (அலை) கோபத்தில் ஒருவரை அடித்ததால் அவர் இறந்து விட்டார். பயந்து கொண்டே நாட்டை விட்டு ஓடினார் – 20:40, 26:14, 28:15-19, 28:33

மூஸாவுக்குத் துணையாக ஹாரூனும் இறைத்தூதராக நியமனம் – 20:42, 23:45, 25:35, 26:13, 28:34,35

பாறையில் அடித்து தண்ணீர் பெருக்கெடுத்த அற்புதம் – 2:60, 7:160

கைத்தடி பாம்பாக மாறுதல் – 7:107, 7:117, 20:20, 26:32, 26:45, 27:10, 28:31

கையில் பிரகாசம் – 7:108, 20:22, 26:33, 27:12, 28:32

கைத்தடியால் கடல் பிளந்தது – 20:77, 26:63

சூனியக்காரருடன் போட்டியிட்டு வெல்லுதல் – 7:110-132, 10:79-81, 20:58-73, 26:37-50

மத்யன் நகருக்குச் சென்று மணமுடித்தல் – 28:23-28

மூஸாவுக்கு எழுத்து வடிவில் வேதம் – 7:145, 7:150, 7:154

மூஸாவின் சமுதாயத்தினர் கொடுத்த தொல்லைகள் – 2:51, 2:54, 2:55, 2:59, 2:61, 2:65, 2:67-73, 2:92, 2:93, 2:108, 4:153, 5:22, 5:24, 7:129, 7:138, 7:148, 7:163, 20:86, 20:88

ஈஸா (அலை)

ஈஸா ஈஸா (அலை) தந்தையின்றிப் பிறந்தார் – 3:47, 3:59, 19:17-21

சீடர்கள் இவரைக் காட்டிக் கொடுக்கவில்லை – 3:52,53, 61:14

ஈஸா (அலை) இறைவனின் மகனல்லர் – 4:171, 4:172, 5:17, 5:72, 5:75, 5:116,117, 9:30, 9:31, 43:59

ஈஸாவுக்கு இஞ்சீல் வேதம் வழங்கப்பட்டது – 3:48, 5:46, 5:110, 57:27

ஈஸாவுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன – 3:49, 5:110, 5:112-114

ஈஸா (அலை) இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதர் – 3:49, 61:6, 61:14

ஈஸா (அலை) தன் காலத்தவருக்கு மட்டுமே தூதர் – 61:6

ஈஸா (அலை) பிறந்ததும் பேசினார் – 3:46, 5:110, 19:29, 19:30

ஈஸா (அலை) பிறந்தவுடன் வேதம்பெற்று நபியானார் – 19:30

ஈஸா (அலை) திருமணம் செய்தார் – 13:38

ஈஸா (அலை) மரணித்து விட்டார்களா? – 3:55, 3:144, 4:159, 5:75, 5:110, 5:116, 19:30,31, 43:61

ஈஸா நபியின் பிறப்பு அற்புதம் என்பதால் அவர் கடவுளாக முடியாது – 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:75

ஈஸா எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டார் – 5:110

உணவுத் தட்டு – 5:112

ஸுலைமான் (அலை)

ஸுலைமான் எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சி – 38:35

காற்றை வசப்படுத்திக் கொடுத்தான் – 21:81, 34:12, 38:36

ஜின், மற்றும் ஷைத்தான்கள் அவரது கட்டளைப்படி அவருக்கு அடிமைச் சேவகம் செய்தனர்

21:82, 27:17, 27:38-40, 34:14, 38:37, 38:38

பறவையின் மொழியையும் இவர் அறிந்திருந்தார் – 27:16, 27:18, 27:20,23

செழிப்பான வாழ்க்கை – 27:44, 34:13, 38:31

இப்ராஹீம் (அலை)

இப்ராஹீம் இறைவனின் சோதனைகள் அனைத்திலும் இப்ராஹீம் வென்றார் – 2:124, 2:131

கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் – 2:127, 14:35, 22:26

இப்ராஹீமின் வழி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாகவும் இருந்தது

2:130, 2:135, 3:68, 3:95, 4:125, 6:161, 16:123

கொடுங்கோல் மன்னனிடம் அறிவுப்பூர்வமாக வாதிட்டுப் பிரச்சாரம் செய்தார் – 2:258

இப்ராஹீம் நபிக்கு இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினான்

2:260, 21:68-70, 29:24, 37:97-98

தந்தையின் தவறான கொள்கையை உறுதியுடன் எதிர்த்தார் – 6:74, 9:114, 19:42-49, 26:70-80, 37:85-89

அறிவுப்பூர்வமாக மனதில் பதியவைக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார் – 6:76-79

முஹம்மத் (ஸல்), இஸ்ஹாக், யாகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித்தோன்றல்களே – 4:163, 6:84, 29:27

தள்ளாத வயதில் இஸ்மாயீல், இஸ்ஹாக் இருவரையும் பெற்றார் – 11:71,72,73, 14:39, 15:53, 15:54, 15:55, 51:29

இறை உத்தரவுப்படி மனைவியையும் பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது – 14:37

தனி நபராகிய இவர் ஒரு சமுதாயமாக இருந்தார் – 16:120

சிலை வணக்கத்திற்கு எதிராகக் கடும் போக்கை மேற்கொண்டார் – 21:52-67, 37:91-96, 60:4

ஹஜ் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் – 22:27

இறைக் கட்டளைக்கேற்ப மகனையும் அறுக்கத் துணிந்தார் – 37:102-108

இப்ராஹீம் நபியின் வழித்தோன்றல்களுக்கு ஆட்சி அதிகாரத்தை நீண்ட காலம் இறைவன் வழங்கியிருந்தான் (4:54.)

இப்ராஹீம் நபி கஅபா ஆலயத்தைக் கட்டுவதற்காக தங்கியிருந்த இடம் மகாமே இப்ராஹீம் எனப்படுகிறது 2:125, 3:97

மனிதர்களில் இறைவன் நண்பனாக்கிக் கொண்டது இவரை மட்டுமே – 4:125

இஸ்மாயீல் தந்தையுடன் சேர்ந்து கஅபாவைக் கட்டினார் – 2:125, 2:127

தம்மைப் பலியிட தந்தை விரும்பியபோது தயக்கமின்றி உடன்பட்டார் – 37:102

இறையருளால் காப்பாற்றப்பட்டார் – 37:107

இவரை அறுக்கும்போது இப்ராஹீம் கண்ணைக் கட்டிக் கொண்டதாகவும், பலமுறை கத்தியால் அறுத்தும் கத்தி அறுக்க மறுத்து விட்டதாகவும் கூறுவது பொய். அறுக்க அவரை கீழே தள்ளியவுடனேயே இறைவன் தடுத்து விட்டான் – 37:103,104

இஸ்ஹாக் (அலை)

இஸ்ஹாக் இவர் இப்ராஹீம் நபியின் மகனாகவும் நபியாகவும் இருந்தார். இவரைப் பற்றி அதிக விபரம் கூறப்படவில்லை

2:133, 2:136, 2:140, 3:84, 4:163, 6:84, 11:71, 12:6, 12:38, 14:39, 19:49, 21:72, 29:27, 37:112, 37:113, 38:45

ஹாரூன் (அலை)

ஹாரூன் இவருக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்தது – 4:163

இவர் மூஸா நபியின் தாய் வழிச் சகோதரராவார் –

5:25, 7:111, 7:142, 7:150, 7:151, 10:87, 19:53, 20:30, 20:42, 23:45, 25:35, 26:36, 28:34,35

இவர் நல்ல நாவன்மைமிக்கவர் – 26:13, 28:34

மூஸா நபியுடன் இணைந்து பணியாற்றியதால் மற்ற விவரங்கள் மூஸா என்ற தலைப்பில் காணலாம்.

தாவூது (அலை)

தாவூது ஜாலூத் என்ற கொடியவனைப் போரில் கொன்றார் – 2:251

தாவூது நபிக்கு ஸபூர் வேதம் வழங்கப்பட்டது – 4:163, 17:55

தாவூது நபிக்கு மலைகளும், பறவைகளும் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டன – 21:79, 34:10, 38:19

தாவூது நபி தான் கவச உடைகளை முதலில் தயாரித்தவர் – 21:80

இரும்பை உருக்கி பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் கலையும் இவர் மூலமே உலகுக்குக் கிடைத்தது (34:10.)

விசித்திரமான வழக்கு மூலம் இவருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது – 38:21-25

நூஹ் (அலை)

நூஹ் ஆதம், இத்ரீஸ் தவிர திருக்குர்ஆனில் கூறப்பட்ட மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார் – 4:163, 6:84

கப்பலில் ஏற்றப்பட்டு இவரும், இவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர். ஏற்க மறுத்தவர்கள் அழிந்து போயினர் – 7:64, 10:73, 11:37-48, 21:76,77, 23:27, 25:37, 26:119, 54:10-15, 69:11

வெள்ளப்பிரளயத்தின் போது எல்லா உயிரினங்களிலிருந்தும் ஒரு ஜோடியைக் கப்பலில் ஏற்றிக் கொண்டார் –

11:40, 23:27

அவரது மகன் அவருக்கு எதிரணியில் இருந்தான். அவனை அவரால் காப்பாற்ற இயலவில்லை

11:42,43, 23:27

அக்கப்பல் ஜுதி மலை மீது நிலைகொண்ட பின் தண்ணீர் வடிந்தது – 11:44

இவர் 950 வருடங்கள் வாழ்ந்தார் – 29:14

அக்கப்பலை இறைவன் அகிலத்துக்கு அத்தாட்சியாக்கினான் – 23:30, 25:37, 26:121, 29:15, 54:15

அவரது மனைவியும் அவரை ஏற்கவில்லை. எனவே அவளை அவரால் காப்பாற்ற முடியாது – 66:10

சமுதாயத்தினரிடம் அவர் பட்ட கஷ்டங்கள் –

7:60-64, 10:71, 11:27-32, 11:38, 23:24,25, 26:111, 26:116, 54:9, 71:5,6,7, 71:22,23

நூஹ் பிரார்த்தனை செய்த பின்னர் அழிக்கப்பட்டனர் – 21:76, 23:26, 26:117,118, 37:75, 71:26

ஸகரிய்யா (அலை)

ஸகரிய்யா மர்யமை ஸகரிய்யா வளர்த்தார் – 3:37

தள்ளாத வயதில் யஹ்யாவை மகனாகப் பெற்றார் – 3:38,-41, 19:3-11, 21:89,90

யஹ்யா (அலை)

யஹ்யா இவருக்கு முன் உலகில் வேறு எவருக்கும் இப்பெயர் வைக்கப்படவில்லை – 19:7

இவருக்குச் சிறு வயதிலேயே வேதத்தையும், ஞானத்தையும் இறைவன் வழங்கினான் – 3:39, 19:12

அய்யூப் (அலை)

அய்யூப் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர் –

21:83-84, 38:41-44

பொறுமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறப்படும் இவரைப் பற்றி இதைத் தவிர வேறு விபரங்கள் கூறப்படவில்லை. அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்று கட்டுக்கதைகள் தான் உள்ளன. அவற்றுக்குச் சான்று ஏதுமில்லை.

யூனுஸ் (அலை)

யூனுஸ் அறிகுறிகள் தென்பட்டவுடன் யூனுஸ் நபியின் சமுதாயம் திருந்தியது. இதுபோல் திருந்திய வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது – 10:98, 37:148

யூனுஸ் நபிக்குத் தெரியாமல் அவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே அவரை அல்லாஹ் தண்டித்தான் – 21:87,88

தனது குற்றத்தை உணர்ந்து வருந்தி மன்னிப்புக் கேட்டதால் அவரை அல்லாஹ் மன்னித்தான் – 21:87,88

கடலில் தள்ளப்பட்ட அவரை திமிங்கலம் விழுங்கியது – 37:140,141,142

யூனுஸ் நபி பாவமன்னிப்புக் கேட்டு இறைவனைத் துதிக்காமல் இருந்திருந்தால் நியாயத் தீர்ப்பு நாள் வரை மீன் வயிற்றிலேயே வைக்கப்பட்டிருப்பார் – 37:143,144

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அனுப்பப்பட்டார் – 37:147

அனைத்து நபிமார்களும் சென்ற வழியில் நடக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்ட இறைவன் இவரைப் போல் நடக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறான் – 6:90, 68:48,

இவரை மன்னித்து பழைய நிலைக்கு அல்லாஹ் உயர்த்தினான் – 6:86, 68:49-50

யூஸுஃப் (அலை)

யூஸுஃப் அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.

இல்யாஸ் (அலை)

இல்யாஸ் இவரைப் பற்றி அதிகமான குறிப்புக்கள் திருக்குர்ஆனில் காணப்படவில்லை. இவர் இறைத்தூதர் என்பதும், தனது சமுதாயத்துக்கு இவர் செய்த பிரச்சாரமும் சுருக்கமாகக் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது – 6:85, 37:123, 7:130-132

இவரது மற்றொரு பெயர் இல்யாஸீன் – 37:130

அல்யஸஃ (அலை)

அல்யஸஃ இவரைப் பற்றி இரண்டு இடங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. இவர் நல்லவர்; சிறந்தவர்; நபி என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் கூறப்படவில்லை – 6:86-6:89, 38:48

துல்கிஃப்ல் (அலை)

துல்கிஃப்ல் இவர் சிறந்த அடியார் – 38:48

ஷுஐப் (அலை)

ஷுஐப் அளவு நிறுவைகளில் மோசடி செய்யும் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:85, 11:84,85, 26:181-183

இவரது சமுதாயத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் – 7:86

ஊர் நீக்கம் செய்வதாக மிரட்டல் – 7:88

மிரட்டலுக்கு அஞ்சவில்லை – 7:89

பூகம்பம் தாக்கியது – 7:91, 11:94, 26:189, 29:37

அடியோடு அழிக்கப்பட்டனர் – 7:92, 11:95

இவரது சமுதாயத்தினர் செழிப்பாக வாழ்ந்தனர் – 11:84

இவரது சமுதாயம் பல தெய்வ நம்பிக்கை கொண்ட சமுதாயம் – 11:87

கொலை மிரட்டல் விட்டனர் – 11:91

ஷுஐப் நபி உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர் – 11:91,92

ஷுஐப் நபி காப்பாற்றப்பட்டார் – 11:94

யாகூப் (அலை)

யாகூப் இப்ராஹீம் நபியின் பேரன் – 2:132

இஸ்ரவேல் எனவும் இவர் குறிப்பிடப்படுவார் – 3:93

யூஸுஃப் நபியின் தந்தை – 12:6

மகனைப் பிரிந்து கவலைப்பட்டார் – 12:84,85

பல வருடங்கள் மகனைக் காணாதிருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை – 12:87

கண்பார்வை இழந்து பார்வை பெற்றார் – 12:96

இறைத்தூதர்களில் ஒருவர் – 19:49

ஸாலிஹ் (அலை)

ஸாலிஹ் ஸமூது கூட்டத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:73

அற்புதமாக ஒட்டகம் அளிக்கப்பட்டது – 7:73, 17:59, 54:27

ஒட்டகத்துக்குக் கேடு தரக்கூடாது என்ற நிபந்தனை – 7:73, 11:64, 17:59, 26:156

இவரது சமுதாயத்தினர் மலைகளைக் குடைந்து வாழ்ந்தனர் – 7:73, 15:82, 26:149, 89:9

இவரது சமுதாயத்தினர் ஒட்டகத்தை அறுத்தனர் – 7:77, 11:65, 26:157, 54:28, 91:14

பூகம்பத்தால் இவரது சமுதாயம் அழிக்கப்பட்டது – 7:78, 11:67, 15:83, 41:17, 51:44, 54:31, 69:5

பலதெய்வ நம்பிக்கையை ஸாலிஹ் நபி எதிர்த்தார் – 11:62

ஸாலிஹ் நபியும், நல்லோரும் காப்பாற்றப்பட்டனர் – 11:66

ஒன்பது கூட்டத்தினர் அவரது சமுதாயத்தில் இருந்தனர் – 27:48

அனைவரும் அழிக்கப்பட்டனர் – 27:51, 53:51

ஸாலிஹ் நபி, ஹிஜ்ர் எனும் ஊரைச் சேர்ந்தவர் – 15:80

ஒட்டகத்துக்கு ஒரு நாள், மக்களுக்கு ஒரு நாள் என தண்ணீர் பங்கீடு – 26:155, 54:28, 91:13

ஸாலிஹ் நபியைப் பீடை என்றனர் – 27:47

ஸாலிஹ் நபியைக் கொல்ல திட்டம் தீட்டினர். இதன் பின் அழிக்கப்பட்டனர் – 27:49-51

ஸாலிஹ் நபியைப் பொய்யர் என்றனர் – 54:25

ஆது சமுதாயத்துக்குப் பின் வந்த சமுதாயமாவர் – 7:74

இவரது சமுதாயம் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தனர் – 11:61, 26:146, 26:147, 26:148

லூத் (அலை)

லூத் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்த ஆண்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார். –

7:80,81, 11:78,79, 15:72, 26:165,166, 27:54,55, 29:28, 29:29

இவர் காலத்தில் தான் ஓரினச் சேர்க்கை முதன் முதலில் தோன்றியது – 7:80

இவரது சமுதாயத்தினர் திருந்த மறுத்து தொல்லை தந்தனர் – 7:82, 26:167, 27:56

இவரது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டனர். ஊரே தலைகீழாக்கப்பட்டது 

7:83, 7:84, 11:81, 11:82, 11:83, 15:65, 15:73, 15:74, 26:173, 27:58, 29:34, 51:33,34, 54:34, 54:38

இவரது மனைவியே இவருக்கு எதிராக இருந்தாள். அவளும் அழிக்கப்பட்டாள் –

7:83, 26:171, 27:57, 29:33, 37:135, 66:10

லூத்துடைய சமுதாயத்தை அழிக்க வந்த வானவர்கள் இப்ராஹீமுக்கு முதலில் நற்செய்தி கூறிவிட்டு பின்னர் லூத்துடைய ஊரை நோக்கிப் புறப்பட்டனர் – 11:71, 11:74, 15:53,54 29:31,32

அழிக்க வந்த வானவர்கள் அழகிய ஆண்கள் வடிவில் வந்ததால் அவர்களையும் தகாத உறவுக்கு அழைத்தனர் – 11:78,79, 11:81, 15:67,68,69, 54:37

இப்ராஹீமும் லூத்தும் சந்தித்துள்ளனர் – 29:26

ஹூது (அலை)

ஹூது ஆது சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:65

பல தெய்வ நம்பிக்கையை எதிர்த்தார் – 7:65, 7:70, 7:71, 11:50, 11:53, 11:54, 46:22

ஹூது நபியும், அவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர் – 7:72, 11:58

ஆது கூட்டம் அழிக்கப்பட்டது – 7:72, 11:58, 23:41, 26:139

இவரது சமுதாயம் வலிமைமிக்க சமுதாயமாக இருந்தது – 11:52, 41:15, 89:8

கடும் காற்றால் அழிக்கப்பட்டனர் – 41:16, 46:25, 51:41,42 54:19,20, 69:6

ஏழு நாட்கள் காற்று வீசியது – 69:7

எவரும் மிஞ்சவில்லை – 69:8

நபி (ஸல்) அவர்கள் 

நபிகள் நாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை – 10:16

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பு – 8:33, 9:128, 17:79

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது – 7:157,158, 25:4,5, 29:48

முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி முன்னறிவிப்பு – 2:146, 6:20, 7:157

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி

4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்ராஹீமின் வழித்தோன்றல் – 2:129

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கனிவும், மென்மையும் – 3:159

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஏதும் அறியாமல் இருந்தனர் – 4:113, 42:52, 93:7

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றனர் – 5:67

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விமர்சனங்களுக்குக் கவலைப்பட்டனர் – 6:33, 10:65, 11:12, 16:127, 27:70

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதர் அனுப்பப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் – 6:156, 32:3, 36:6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பைத்தியம் என்றனர் 

7:184, 15:6, 23:70, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர் – 8:5, 8:30, 9:40

இறைவனின் தனி அன்பு – 8:33

அபூபக்ருடன் ஹிஜ்ரத் – 9:40

தவறை இறைவன் சுட்டிக் காட்டுதல் – 3:128, 8:67, 9:43, 9:80, 9:84, 9:101, 9:108, 11:12, 18:6, 26:3, 28:56, 66:1, 80:1

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயம் சிரமப்படுவதற்காக கவலைப்பட்டனர் – 9:128, 26:3

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாயத்தின் மீது அதிக அன்புடையவர் 

9:61, 9:128, 16:127, 18:6, 27:70, 33:6, 35:8,

மந்திரவாதி என்றனர் – 10:2, 38:4

நபியாகும் முன் பரிசுத்த வாழ்க்கை – 10:16

மனைவி, மக்கள் இருந்தனர் – 13:38, 33:6, 33:28-36

மிஃராஜ் பயணம் – 17:1, 17:60, 32:23, 53:13,14, 53:15, 53:18

சூனியம் வைக்கப்பட்டவர் என்றனர் – 17:47, 25:8

மறுமையில் புகழிடம் – 4:41, 16:89, 17:79, 68:3, 92:21, 93:5, 108:1

விரட்டியடித்த ஊருக்கு திரும்பிச் செல்லுதல் – 28:85

நற்குணம் – 68:4, 3:159

கவிதை தெரியாது – 36:69

சிறு வயதில் பெற்றோரை இழந்தார் – 93:6

பின்னர் வசதி படைத்தவராக ஆனார் – 93:8

பேரும், புகழும் – 94:4

நல்லோர் – தீயோர் நல்லோர்

 மர்யம் பிறப்பு – 3:36-39

இறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார் – 3:35

இறைவனால் சிறப்பாகக் கவனிக்கப்பட்டார் – 3:37, 3:44, 3:45, 5:110

மிகச் சிறந்த பெண்மணி – 3:42, 5:75, 21:91, 23:50, 66:12

ஆண் துணையின்றி கருவுற்றார் – 3:45, 4:156, 4:171, 19:16-19 19,20,21, 19:27, 21:91

மர்யம் கடவுள் அல்ல – 5:17, 5:75

இம்ரான் இம்ரான் – 3:33, 3:35, 66:12

அபூபக்ர் அபூபக்ர் – 9:40

குகைவாசிகள் குகைவாசிகள் – 18:9-21

லுக்மான் லுக்மான் – 31:12, 31:13

தாலூத் தாலூத் – 2:247, 2:249, 2:250

துல்கர்னைன் துல்கர்னைன் – 18:83-98

அந்த மூவர் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் – 9:118

ஸைத் ஸைத், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் – 33:37

ஸைத் தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை மணந்து கொண்டனர் – 33:37

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் – 33:37

ஸாபியீன்கள் ஸாபியீன்கள் – 2:62, 5:69, 22:17 

தீயோர் 

ஆது சமுதாயம் ஹூத் எனும் தலைப்பில் காண்க. ஸமூது ஸாலிஹ் என்னும் தலைப்பில் காண்க. யானைப்படை யானைப்படை – 105:1

அபூலஹப்

அபூலஹப் – 111:1-3

இரம்

இரம் – 89:7

காரூன்

காரூன் – 28:76, 28:79, 28:81, 29:40

ஆஸர்

ஆஸர் – 6:74, 9:114, 19:42, 21:52, 26:70, 37:85, 43:26, 60:4

ஜாலூத்

ஜாலூத் – 2:249, 2:251

யஃஜூஜ் மஃஜூஜ்

யஃஜூஜ் மஃஜூஜ் – 18:94, 21:96

ஃபிர்அவ்ன்

ஃபிர்அவ்ன் இஸ்ரவேல் சமுதாய ஆண்களை மட்டும் கொன்று குவித்தான் – 2:49, 7:127, 7:141, 14:6, 28:4

அவனது மனைவி உண்மையான முஸ்லிம்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் – 66:11

கடலில் மூழ்கடிக்கப்பட்டான் – 2:50, 10:90, 20:78, 44:24

சர்வாதிகாரம் செய்தான் – 10:83, 28:4, 43:51, 44:31

தன்னைக் கடவுள் என்றான் – 28:38, 79:24

ஸாமிரீ

ஸாமிரீஇஸ்ரவேலர்களின் நகைகளை உருக்கி காளைச்சிற்பத்தை உருவாக்கினான் – 7:148, 20:87

மூஸா நபி தூர் மலைக்குச் சென்ற பின் அவரது சமுதாயத்தை வழிகெடுத்தான் – 20:85

காளைச் சிற்பம் தான் இறைவன் என்று நம்பச் செய்தான் – 20:88

மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதைப் போட்டு காளைச் சிற்பத்தை சப்தமிடச் செய்தான் – 20:96

மஜூஸிகள்

மஜூஸிகள் – 22:17 

நயவஞ்சகர்கள் 

இரட்டை வேடம் போட்டனர் – 2:8, 2:11, 2:14, 3:119, 4:143, 5:61, 8:49, 9:56,57, 9:96, 47:16, 63:1.

மோசடி செய்தனர் – 2:9, 4:142

நல்லோரை மூடர் என்றனர் – 2:13

பொய்ச் சத்தியம் செய்தனர் – 2:204

கவர்ச்சியாகப் பேசினர் – 2:204, 47:30

குழப்பமும் நாசமும் ஏற்படுத்தினர் – 2:205

பாவம் செய்வதில் அகந்தை கொண்டனர் – 2:206

சதித் திட்டம் போட்டனர் – 3:118, 3:119, 4:81, 4:108, 9:47

முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பத்தில் மகிழ்ச்சியடைந்தனர் – 3:120

உள்ளத்தில் இல்லாததை வாயால் மொழிந்தனர் – 3:167, 9:62

நெருக்கடியான நேரத்தில் காலை வாரினர் – 3:167, 9:42

இறைத்தூதரின் போதனையைக் கேட்க மறுத்தனர் – 4:61

தீமையைச் செய்து விட்டு நல்லது செய்வதாகப் பொய்ச் சத்தியம் செய்தனர் – 4:62, 9:107

முஸ்லிம்களையும், எதிரிகளையும் சேர்த்து ஏமாற்றினர் – 4:91

நயவஞ்சகர்களுக்குக் கடும் தண்டனை – 4:138, 4:140, 4:145, 9:68, 9:95, 33:73, 48:6, 57:13

நயவஞ்சகர்கள் தொழுதனர் – 4:142

முஸ்லிம்களை உளவு பார்த்தனர் – 5:41, 9:47

செய்திகளைத் தப்பாகக் கூறினர் – 9:48

வாங்கும் கூலிக்கேற்ப கொள்கையை மாற்றினர் – 9:58

மாட்டிக் கொண்டால் விளையாட்டாகக் கூறினோம் என்றனர் – 9:65

தீமைகளை ஏவி நன்மைகளைத் தடுத்தனர் – 9:67

நிராகரிப்பவரும், நயவஞ்சகர்களும் சமமானவர்கள் – 9:73

முஸ்லிம்கள் நல்லது செய்தால் கேலி செய்தனர் – 9:79

நயவஞ்சகருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது – 9:84

பள்ளிவாசலைத் தீய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினார்கள் – 9:107

ஒளிந்து மறைந்து விடுவதில் வல்லவர்கள் – 9:127, 24:63

தங்களுக்குச் சாதகமானதை மட்டும் பிடித்துக் கொள்வார்கள் – 5:41, 24:49

பயம் ஏற்பட்டால் மரணத்தைக் கண்டது போல் ஓட்டமெடுப்பார்கள் – 33:19, 47:20

சில விஷயங்களில் மட்டும் கட்டுப்படுவதாகக் கூறுவர் – 47:26

சத்தியம் செய்வதைக் கேடயமாக்குவார்கள் – 58:16, 63:2

உடலமைப்பால் பிறரைக் கவர்வார்கள் – 63:4

சிறிய சலசலப்பையும் தங்களுக்கு எதிரானது என நினைப்பார்கள் – 63:4 

மற்றவர்கள் 

இஸ்ரவேலர்கள் இறைவன் பல சிறப்புக்களை வழங்கினான் – 2:47, 2:122

அதிகமான இறைத்தூதர்களை அவர்களிலிருந்து அனுப்பினான் – 5:20

நீண்ட காலம் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தினான் – 4:54, 7:137, 10:93, 26:59

அற்புதமான விதத்தில் வசதிகளை இறைவன் கொடுத்தான் – 2:57, 7:60, 7:160, 20:80

தாம் மட்டுமே பிறப்பால் உயர்ந்தவர்கள் என இவர்கள் நினைத்தனர் – 3:75, 5:18

மக்கள் பணத்தை மோசடியாகச் சாப்பிட்டனர் – 4:161, 9:34

மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டனர் – 2:41, 2:79, 2:174, 3:187, 5:44,

இறைவனின் ஆற்றலைக் கண்ட பின்பும் கண்டதையும் கடவுளாக்கிக் கொண்டனர் 

2:51, 2:54, 2:92, 7:138, 7:148, 20:88, 20:96

இறைவனின் அற்புதங்களை அனுபவித்துக் கொண்டே அல்லாஹ்வைப் பார்க்காமல் நம்ப மாட்டோம் என்றனர் – 2:55, 4:153

இறைத்தூதர்களைக் கொன்றனர் – 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70

இறைவேதத்தில் கைவரிசை காட்டினர் – 2:79, 2:159, 2:174, 3:78, 3:187, 4:46, 5:13, 5:41

பன்றிகளாகவும், குரங்குகளாகவும் சிலர் மாற்றப்பட்டனர் – 2:65, 5:60, 7:166

சிலர் அழிக்கப்பட்டனர் – 2:55, 4:153, 7:155 

யூதர்கள் 

யூதர்கள் – 2:62, 2:113, 2:120, 2:135, 2:140, 4:46, 4:160, 5:18, 5:41, 5:44, 5:51, 5:64, 5:69, 5:82, 6:146, 9:30, 16:118, 22:17, 62:6 

கிறித்தவர்கள் 

கிறித்தவர்கள் – 2:62, 2:111, 2:113, 2:120, 2:135, 2:140, 5:14, 5:18, 5:51, 5:69, 5:82, 9:30, 22:17

ஆதமின் இரு புதல்வர்களில்

ஒருவர் ஆதமின் இரு புதல்வர்களில் ஒருவர். 5:27

மனாத்

மனாத் (சிலை) – 53:20

லாத்

லாத் (சிலை) – 53:19

உஸ்ஸா

உஸ்ஸா (சிலை) – 53:19

வத்து

வத்து (சிலை) – 71:23

ஸுவாவு

ஸுவாவு (சிலை) – 71:23

யகூஸ்

யகூஸ் (சிலை) – 71:23

நஸ்ர்

நஸ்ர் (சிலை) – 71:23

குரைஷ்

குரைஷ் – 106:1

ஸித்ரதுல் முன்தஹா

ஸித்ரதுல் முன்தஹா வானுலகில் உள்ள மரம் – 53:14

பார்வைகளைக் கவரும் அழகுடையது – 53:16,17

இவ்விடத்தில் ஜிப்ரீலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள் – 53:13,14