Tamil Bayan Points

வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்த 800 முஸ்லிம் குடும்பங்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on June 2, 2019 by

வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்த 800 முஸ்லிம் குடும்பங்கள்

ஜார்கண்ட் மாநிலம், லத்தேகர் மாவட்டம், புகாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மும்தாஜ் அலி என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தைப் பார்த்து தனது மகன் திருமணத்துக்கு வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுத்தார். மேலும் லடேகர், பலாமு ஆகிய மாவட்டங்களைச் செர்ந்த சுமார் 800 முஸ்லிம் குடும்பத்தினர் தங்கள் மகள் திருமணத்துக்கு வரதட்சணையாக வாங்கிய ரூ6 கோடிக்கும் மேற்பட்ட தொகையை மணமகள் குடும்பத்தினருக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வரதட்சணை வாங்குவது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் நாட்டில் நடக்கும் எந்தத் திருமணமும் வரதட்சணை இல்லாமல் நடப்பதில்லை. அப்படி இருக்கும் போது முஸ்லிம்கள் மட்டும் வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுப்பதற்கு சட்டத்தின் மீதான பயம்தான் காரணம் என்று நினைத்து விடக் கூடாது. இஸ்லாமிய மார்க்கத்தில் மணமகளுக்கு மணமகன்தான் மஹர் எனப்படும் திருமணக் கொடை கொடுக்க வெண்டும் என்று உள்ளது.

இப்படி மஹர் கொடுக்காமல் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்கி திருமணம் செய்தால் அது பாவம். இதற்காக நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற இறையச்சம் முஸ்லிம்களிடம் ஊட்டப்பட்டது. இதன் காரணமாகவே முஸ்லிம் இளைஞர்கள் வாங்கிய வரதட்சணையை பெண் வீட்டாரிடம் திருப்பிக் கொடுப்பதோடு, வரதட்சணை வெண்டாம் என்றும் மறுத்து வருகின்றனர். இது ஜார்கண்டில் நடப்பது போலவும், தமிழ்நாட்டில் நடக்காதது போலவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது காமாலைப் பார்வையாகும். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கடந்த 35ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வரதட்சணைக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தின் பயனாக வரதட்சணை வாங்கி திருமணம் முடித்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் வரதட்சணையை திருப்பித் தந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் மணமகளுக்கு மணமகன் மஹர் கொடுத்து நடக்கும் திருமணங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன.

சென்னை தலைமையகத்தில் இது மாதிரியான இஸ்லாமியத் திருமணங்கள் நடப்பது சகஜமான ஒன்றாகி விட்டது. இப்படி வரதட்சணை இல்லா திருமணம் நடப்பதற்கு இறையச்சம் மட்டுமே காரணமாகும். அப்படிப் பார்த்தால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்காமல், பெண்ணுக்கு கொடை கொடுத்து நடக்கும் திருமணம் தமிழ்நாடடில்தான் அதிகம் என்று சொல்லலாம். இப்படி இந்தியாவுக்கே தமிழகம் முன் மாதிரியாக இருக்க ஜார்கண்ட் முஸ்லிம்கள் மட்டுமே வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள் என ஊடகங்கள் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.

வரதட்சணை ஒரு பாவச் செயல். இதனால் ஏற்படும் தீங்குகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதை முஸ்லிம் சமூகம் உணர்ந்தது போல் முஸ்லிமல்லாதவர்களும் உணர்ந்து, வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிக்க முன் வர வேண்டும். முன்வருவார்களா?

Source : unrvu ( 10/03/17 )