Tamil Bayan Points

1) முன்னுரை

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

Last Updated on April 23, 2023 by

முன்னுரை

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது பகல் கனவு காணாதே‘ என்று கூறுவதும்சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது ஊமை கண்ட கனவு போல்‘ என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும்.

கனவு காணாதவன் மனிதனாக இருக்க முடியாது என்ற அளவுக்கு அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அம்சமாக மாறிவிட்ட கனவு பற்றி இஸ்லாம் கூறுவதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். கனவு பற்றி ஒருவன் எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதன் அடிப்படையில் அவனது வாழ்க்கையிலும் மாறுதல் ஏற்படுவதால் இதுபற்றி விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது.

  • கனவு கண்டு விட்டு தன் மனைவியை சந்தேகித்தவர்கள்.
  • அவளை விவாக விலக்கு செய்தவர்கள்
  • குழந்தைகளை நரபலியிட்டவர்கள்
  • கனவில் கண்டது போலவே தங்கள் பொருட்களைச் செலவிட்டவர்கள்
  • பணக்காரனாக ஆவது போல் கண்டு அதை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எனப் பட்டியல் நீள்கிறது.

உயிரினுமினிய ஈமானையும் பறிகொடுக்க கனவுகளை காரணம் காட்டுவோர் ஏராளம்!

எனவே கனவுகள் பற்றி முழுமையாக முஸ்லிம்கள் விளங்க வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்‘ என்ற நூலை வெளியிட்டோம்.  இந்த நூலை வாசிப்பவர்கள் கனவுகளால் ஏற்படும் குழப்பங்களிலிருந்து விடுபட இயலும். கனவுகளால் வழிதவறாமல் தடுத்து நிறுத்தும் வகையில் கீழ்க்காணும் தலைப்புக்களில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் ஆசிரியர்: பீ.ஜெய்னுல் ஆபிதீன்