Tamil Bayan Points

1) முன்னுரை

நூல்கள்: மனிதனுக்கேற்ற மார்க்கம்

Last Updated on December 12, 2019 by

முன்னுரை

பாமர மக்கள் தங்களின் மதத்தின் மீது கண்மூடித்தனமான பற்று வைத்திருந்தாலும் சிந்தனையாளர்களும், படித்தவர்களும் தங்களின் மதங்களை சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்து வருகின்றனர். சிலர் வெளிப்படையாகவே தங்களின் மதக் கோட்பாடுகளை எதிர்த்து வருகின்றனர்.

அவர்கள் சந்தேகிப்பதிலும் எதிர்ப்பதிலும் நியாயங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அறிவுக்குப் பொருத்தமில்லாமலும், மக்களை ஏமாற்றுவதற்கு உதவும் வகையிலும், ஒரு சாராருக்கு அநீதி இழைக்கும் வகையிலும் அந்தச் சித்தாந்தங்கள் இருப்பதால் தான் எதிர்க்கிறார்கள்; சந்தேகிக்கின்றார்கள்.

ஆனால் இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் அத்தகைய குறைபாடுகள் அற்றதாக அமைந்துள்ளன. நடுநிலைக் கண்ணுடன் இஸ்லாத்தை அணுகும் யாராக இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுவார்களே தவிர வெருண்டு ஓட மாட்டார்கள்.

இந்தக் கருத்தை மையமாக வைத்து, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரையே மனிதனுக்கேற்ற மார்க்கம்’ என்ற இந்த நூல்.

இந்நூல் பல பதிப்புகளைக் கண்டிருந்தாலும் இந்தப் பதிப்பு பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் நேரடியாக, பேச்சு நடையிலிருந்து எழுத்து நடைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாத மாற்று மத நண்பர்களுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூலாக அமைந்துள்ள இந்நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நபீலா பதிப்பகம்

  • சென்னை
  • மனித குல ஒருமைப்பாடு
  • சுயமரியாதை நிலவும்
  • நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்
  • கலப்பில்லாத ஓரிறைக் கொள்கை
  • இறைவனுக்குச் சோர்வும் உறக்கமும் இல்லை
  • கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்
  • மனிதனைப் பண்படுத்தும் மறுமை நம்பிக்கை
  • அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு
  • மனித உரிமை பேணுதல்
  • கடவுளின் பெயரால் வரம்பு மீறுதல்
  • மனிதன் கடவுளாக முடியாது
  • இஸ்லாம் தான் முதல் தோன்றிய மார்க்கம்
  • முஹம்மது இறைத் தூதரா?
  • இடைத் தரகருக்கு இடமில்லை
  • இஸ்லாத்தின் மீது விமர்சனங்கள்