Tamil Bayan Points

மனைவியைக் கொலை செய்து ஜோதிடத்தை பொய் என நிரூபித்த ஜோதிடர்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on June 2, 2019 by

மனைவியைக் கொலை செய்து ஜோதிடத்தை                                                                                                          பொய் என நிரூபித்த ஜோதிடர்

தேனியை அடுத்துள்ள பழனி செட்டிப்பட்டி, பெரியார் தெருவில் வசித்து வந்தவர் கொடியரசு.ஜோதிடர் ஆன இவருக்கு சின்னப்பொண்ணு என்ற மனைவியும், 2 குழ்ந்தைகளும் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட இந்த ஜோதிடர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28- ஆம் தேதி மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, சின்னப் பொண்ணுவின் தந்தையான ராஜா ராம்ராவ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் போலிசார் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிபதி கனியரசு மனைவியை கத்தியால் குத்திக் கொன்றதற்காக ஜோதிடருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதமும், மாமனார் ராஜா ராம்ராவை மிரட்டியதற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ 1000அபராதமும் விதித்து, இந்த இரண்டு தண்டனைகளையும் ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். மனைவி நல்லவளா? நடத்தை கெட்டவளா? என்று கூடஜோதிடருக்குத் தெரியவில்லை.

இப்படி மனைவி குறித்தே தெரியாத இவர், – கடந்த காலத்தில் நடந்ததைச் சொல்கிறேன் எதிர்காலத்தில் நடக்கப் போவதைச் சொல்கிறேன் என ஜோதிடம் சொல்லி இருக்கக் கூடாது. இவர் தான் இப்படி புளுகித் திரிகிறார் எனில் கண்ணுக்குப் பின்னால் உள்ள எந்த ஒன்றையும் கண்டறியும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. அதனால் ஜோதிடம் பொய் என்று மக்கள் விளங்கி, இவரிடம் ஜோதிடம் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த இரண்டும் நடந்தது. தங்கு தடையின்றி ஜோதிட வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவை அனைத்தும் பொய் என, மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்த ஜோதிடர் கொடியரசுவின் செயல் நிரூபிக்கிறது. இதற்குப் பிறகாவது மக்கள் விழிப்படைந்து ஜோதிடம் ஒரு ‘ஹம்பக்’ என முடிவுக்கு வந்து, ஜோதிட மாயையிலிருந்து விலகுவார்களா?

Source : unarvu ( 10/03/2017 )