Tamil Bayan Points

23) போர்கள் மற்றும் கலவரத்தின் போது

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 29, 2022 by Trichy Farook

போர்கள் மற்றும் கலவரத்தின் போது

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி[B], ஸரீஅல் ஹிஸாபி[B], அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B], அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

இதன் பொருள் :

இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!

ஆதாரம்: புகாரி-2933 , 4115

அல்லது

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B] வமுஜ்ரியஸ் ஸஹாபி(B] வஹாஸிமல் அஹ்ஸாபி(B] இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.

இதன் பொருள் :

இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!

ஆதாரம்: புகாரி-2966 , 3024