Tamil Bayan Points

பெரியோருக்கு மரியாதை செலுத்துவதின் முக்கியத்துவம் 

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on May 13, 2023 by Trichy Farook

பெரியோருக்கு மரியாதை செலுத்துவதின் முக்கியத்துவம் 

 عَنِ ابْنِ عَبَّاسٍ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : இப்னு ஹிப்பான்-458 (458)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ஜரீர் அவர்களுக்கும், அப்துல்மலிக் அவர்களுக்கும் இடையில் லைஸ் பின் அபூஸுலைம் விடப்பட்டுள்ளார். மற்ற அறிவிப்பாளர்தொடர்களிலிருந்து இது தெரிகிறது. ளியாவுத்தீன் மக்திஸீ அவர்களும், ஜரீர் அவர்கள் அப்துல்மலிக் அவர்களிடம் இந்த ஹதீஸை செவியேற்கவில்லை என்று கூறியுள்ளார். (அல்அஹாதீஸுல் முக்தாரஹ்)
  • மேலும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

அல்பானீ அவர்கள் இந்த அறிவிப்பாளர்தொடரை பலவீமானது என்றும்; இதில் வரும் நன்மை, ஏவி தீமையைத் தடுத்தல் என்ற கூடுதல் பகுதியை பலவீனமானது என்றும்; லைஸ் பின் அபூஸுலைமின் காரணமாகவே இந்த அறிவிப்பாளர்தொடரில் குளறுபடி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-2108)

(சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-4943

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

நூல்: அபூதாவூத்-4943 , அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)