Tamil Bayan Points

பெண்களே! சிந்திப்போம்! செயல்படுவோம்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 28, 2023 by Trichy Farook

பெண்களே! சிந்திப்போம்! செயல்படுவோம்!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

இவ்வுலகத்தில் மனிதன் சீராகவும், சிறப்பாகவும் வாழ்வதற்கு வாழ்க்கை துணைவி சரியாக இருந்தால் அனைத்து காரியங்களையும் ஒருவர் வெற்றி பெற்றுவிடுவார். ஆனால் அவனுடைய வாழ்க்கை துணைவி ஒழுக்கமாக இல்லையென்றால் அவனது வாழ்க்கை அழிந்து சீர்குழைந்து விடுகிறது. தனது மனைவியிடம் ஒழுக்கம் இல்லாத காரணத்தினால் பல மனிதனர்கள் வழிக்கெட்டு போய் விடுகிறார்கள்.

ஒவ்வொரு ஏகத்துவவாதிகளும் தனது குழுந்தைக்கு சிறிய வயதிலிருந்து ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். சிறிய வயதில் ஒழுக்கத்தை கற்பித்தால் தான் அவர்கள் புகுந்த வீட்டிற்கு போகும் போது அங்கே ஒழுக்கமாக வாழ்வார்கள். தனது மக்கள் படிக்கும் வயதில் அவள் என்ன செய்கிறாள், எப்படி படிக்கிறாள், அவளுடைய பழக்க வழக்கம் எப்படி இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இக்காலத்தில் உள்ள எத்தனையே பெண்கள் தனது கணவர் வீட்டில் வாழாமல் தனது தாய் வீட்டில் வாழ்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பதை நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள். மனிதன் இவ்வுலகத்தில் செல்வங்களை விட அதிகமாக நேசிப்பது தனது மனைவி தான். உலகத்தில் ஒருவனுக்கு பல கோடி ரூபாய் செல்வம் இருந்தாலும் அவை மிகப்பெரிய பொக்கிஷமாக கருதமாட்டான்.

தனது மனைவிதான் மிகப் பெரிய பொக்கிஷமாக கருதிகிறான். தன்னுடைய தாய் மனைவியின் மீது குற்றத்தை சுமத்தினாலும் அதை கண்டும் காணாமல் கணவர் விட்டு விடுகிறார். ஏனென்றால் தனது மனைவியின் மீது வைத்துயிருந்த நேசம். மனைவியை அதிகமாக நேசம் கொண்டவனாக இருக்கிறான்.

கணவனின் நேசத்தை பெற வேண்டுமென்றால் இஸ்லாம் கூறிய வழிமுறைகளை ஒவ்வொரு பெண்மணியும் கடைபிடிக்க வேண்டும். கணவர் வீட்டில் இல்லாத போது அந்த பெண்மணிகள் ஒழுக்கமில்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

கணவன் வீட்டில் இல்லாத போது மற்றவர்களை அனுமதிப்பது, அவர்களிடம் குழைந்து பேசுவது, கணவன் அனுமதியில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லுவது, வீட்டில் அல்லாஹ்வை நினைவு கூறாமல் ஆபாசமான (டிவி) காட்சிகளை பார்ப்பது, இப்படி கெட்டவர்களாக மாறிவிடுகிறார்கள். பெண்களே நீங்கள் நல்லவர்களா ஆக வேண்டுமா? இஸ்லாம் கூறும் வழிமுறைகளை கடைபிடியங்கள்.

உலகத்திலே சிறந்தது பெண்கள் தான்

இந்த உலகத்தில் மிகப் பெரிய பொக்கிஷம் தன் மனைவி தான். ஒருவர் தனது மனைவி பற்றி தவறாக பேசினால் அவரிடம் சண்டைக்கு செல்கிறோம். அல்லது தன் மனைவி தவறு செய்து விட்டால் அவளுடைய தவறை கணவர் மறைக்கின்றார். இப்படி தன் மனைவியை ஒரு பொக்கிஷமாக பேணிக் பாத்துக்கொள்கிறான். இவ்வுலகத்தில் வசதி இல்லாமல் வாழ்ந்து விடலாம். மனைவி இல்லாமல் ஒருவராலும் வாழமுடியாது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து செல்வங்களை விட நல்ல பெண்கள் சிறந்தவள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம்-2911 

நல்ல பெண்கள் யார்?

இந்த உலகத்தில் நல்ல பெண்கள் தான் சிறந்தவள். அந்த நல்ல பெண் யார்? அவர்களுடைய செயல் எப்படி இருக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.

அறிவிப்பவர் : உமர் ரலி அவர்கள்,
நூல் : அபூதாவூத்-1664 (1417)

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன்: 33:35)

மேலே கூறப்பட்ட செயல் யாரிடம் உள்ளதே இவர்கள் தான் நல்ல பெண்கள்.

வீட்டில் அல்லாஹ்வை நினைவு கூறுதல்

கணவர் தனது வீட்டில் இருக்கும் போது மனைவிமார்கள் நல்ல செயல் செய்வார்கள். டிவி பார்க்கமாட்டார்கள். அடுத்தவர்களை பற்றி அவதூறு பேச மாட்டார்கள். கணவனுடைய தாய், தந்தை, சகோதரியை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். ஆனால் கணவர் வீட்டில் இல்லையென்றால் அனைத்து செயல்களையும் விட்டுவிடுவார்கள். இப்படி கெட்ட குணம் உள்ளவர்கள் நல்ல பெண்களல்ல.

وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 33:34)

வீட்டில் கணவரில்லையென்றால் பிறருக்கு அனுமதி தர கூடாது

கணவர் வீட்டில் இல்லாத போது அவரை தேடி யாரவது வந்தால் அவர்களுக்கு அனுமதியளிக்க கூடாது. கணவர் வந்த பிறகு தான் அவர்களுக்கு அனுமதிதர வேண்டும். இப்படி தான் இஸ்லாம் கூறுகிறது. அந்நியர்களை ஆண்கள் இல்லாத வீட்டிற்கு செல்ல கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
لَا يَحِلُّ لِلْمَرْأَةِ أَنْ تَصُومَ وَزَوْجُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ وَلَا تَأْذَنَ فِي بَيْتِهِ إِلَّا بِإِذْنِهِ وَمَا أَنْفَقَتْ مِنْ نَفَقَةٍ عَنْ غَيْرِ أَمْرِهِ فَإِنَّهُ يُؤَدَّى إِلَيْهِ شَطْرُهُ وَرَوَاهُ أَبُو الزِّنَادِ أَيْضًا عَنْ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ فِي الصَّوْمِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரது அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி-5195 

 عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ
نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَدْخُلَ عَلَى الْمُغَيَّبَاتِ

அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
கணவர் இல்லாத வீட்டில் நாங்கள் நுழைவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

நூல் : அஹ்மத்-17761 (17094)

பிறர் நமது வீட்டிற்கு வந்தால் நாம் கண்ணியமாக இருக்க வேண்டும்

கணவர் வீட்டில் இருக்கும் போது கணவருடைய நண்பன் வீட்டிற்கு வந்தால் அவர்களிடத்தில் கண்ணியமாக நடக்க வேண்டும். அவர்களிடத்தில் குழைந்து பேசக் கூடாது. கிண்டலும், கேலியும் பண்ண கூடாது. அவர்களை கண்டால் நாம் மறைந்துக் கொள்ள வேண்டும். நமது குரலை தாழ்த்திக் கொள்ள வேண்டும். இதை தான் இஸ்லாம் கூறுகிறது. ஸஹாபி பெண்மணிகளும் இந்த வழிமுறையை தான் கடைபிடித்துள்ளார்கள்.

عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ
قَالَ اسْتَأْذَنَ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ نِسْوَةٌ مِنْ قُرَيْشٍ يُكَلِّمْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ عَالِيَةً أَصْوَاتُهُنَّ عَلَى صَوْتِهِ …

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) உமர் பின் கத்தாப் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அப்போது (நபியவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக் கொண்டும் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி கேட்டுக் கொண்டும் இருந்தனர். அவர்களுடைய குரல்கள் நபி (ஸல்) அவர்களுடைய குரலை விட உயர்ந்திருந்தன.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டவுடன் அப்பெண்கள் எழுந்து அவசர அவசரமாகப் பர்தா அணிந்து கொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். (தம் வீட்டுப் பெண்கள் உமர் அவர்களுக்கு அஞ்சுவதைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். “அல்லாஹ் உங்களை ஆயுள் முழுவதும் சிரித்தபடி (மகிழ்ச்சியுடன்) வாழ வைப்பானாக! அல்லாஹ்வின் தூதரே!” என்று உமர் (ரலி) சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் குறித்து நான் வியப்படைகிறேன். உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து கொண்டார்களே” என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இந்தப் பெண்கள் அஞ்சுவதற்கு நீங்கள் தாம் மிகவும் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். பிறகு உமர் அவர்கள் (அப்பெண்களை நோக்கி),

“தமக்குத் தாமே பகைவர்களாயிருப்பவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கு நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட கடுமை காட்டக்கூடியவரும் கடின சித்தம் கொண்டவரும் ஆவீர்கள்” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சும்மாயிருங்கள், கத்தாபின் புதல்வரே! என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டு வேறொரு தெருவில் தான் செல்வான்” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி-3683 

குழைந்து பேசக்கூடாது

கணவன் வீட்டில் இல்லாத போது மற்றவர்களை அனுமதிப்பதை, அவர்களிடம் குழைந்து பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். ஆனால் இக்காலத்தில் கணவனின் நண்பனிடம் சகஜமாக பழக்கம் வைக்கிறார்கள். அல்லது நாம் வெளியே செல்லும் போது பிறரிடத்தில் நமக்கு பழக்கம் ஏற்படும். அவர்களிடத்தில் நம்முடைய போன் நம்பரை தருகிறோம். நம்முடைய கணவர் அல்லது பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் நாம் போன் செய்து அல்லது அவர்கள் போன் செய்து மணி கணக்காக குழைந்து பேசுகிறோம்.

அறியாமை காலத்தில் பெண்கள் சில்லரை தனமாக நடந்துக்கொள்ளவில்லை. இக்காலத்தில் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு ஆண்களிடத்தில் சாதாரணமாக பழக்கம் வைத்துக் கொள்கிறார்கள். இதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அல்லாஹ் நபியின் மனைவியை அனைத்து பெண்மணிகளுக்கும் முன்னுதாரணமாக காட்டுகிறான். இந்த செயல் அனைத்து பெண்மணிக்கும் அடங்கும்.

يَانِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنْ النِّسَاءِ إِنْ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்

(அல்குர்ஆன்: 33:32)

வெளியே சுத்தக் கூடாது

தனது கணவர் வெளிநாட்டிலிருந்து வந்து விட்டால் மனைவிமார்கள் வீட்டை விட்டு வெளியே செல்லமாட்டார்கள். ஆனால் தனது கணவர் மறுபடியும் வெளிநாடு சென்றுவிட்டால் தனது வீட்டில் தங்கமாட்டார்கள். அவர்களுடைய இஷ்டபடி நடப்பார்கள். இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் தனது கணவரின் அனுமதியில்லாமல் வெளியே சுத்துகிறார்கள். இந்த செயலை இஸ்லாம் தடுக்கிறது.

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

(அல்குர்ஆன்: 33:33)

தனியாக பிராயணம் செய்ய கூடாது

நவீன காலத்தில் காதல் என்ற பெயரில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனியாக பிரயாணம் செய்ய கூடிய பெண்களை நாம் பார்க்கிறோம். காதல் செய்வதே தவறு. திருமணம் முடிக்க தகுதியாவர்களுடன் தனியாக பிரயாணம் செய்வதும் மற்றொரு தவறு. இந்த இரண்டு தவறையும் ஒரே நேரத்தில் செய்கிறார்கள். இப்படி அவர்களுடைய மன போக்கில் செல்கிறார்கள். இந்த செயல்களை இஸ்லாம் கண்டுக்கிறது.

لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا وَخَرَجَتْ امْرَأَتِي حَاجَّةً قَالَ اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்

நூல் : புகாரி-3006 

வெளியே செல்லும் போது வாசனை பொருள் பூசக்கூடாது.

திருமணம் முடிக்க தகுதியானவர்களுடன் தனியாக பிராயணம் செய்ய கூடாது. ஆனால் பிரயாணம் செய்வது மட்டுமில்லாமல் திருமணம் அல்லது மற்ற விசேஷமான காரியங்கள் நடக்கும் இடத்திற்கு செல்லும் போது பிறர் தன்பக்கம் பார்க்க வேண்டும் என்பதற்காக வாசனை பொருட்கள் அல்லது பூ, இது போன்ற திரவங்களை வைத்துகொண்டு செல்வது. பிறர் நம்பக்கம் பார்க்க வேண்டும் என்பதற்காக வாசன திரவத்தை பூசிக்கொண்டால் விபச்சாரி என்று இஸ்லாம் கூறுகிறது.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை (பிறர்) நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸாயீ-5126 (5036)

முக்காடுகளை போட வேண்டும்

இக்காலத்தில் உள்ள பெண்கள் ஃபேஷன் என்று சொல்லிக்கொண்டு தனது மார்பின் மீது முக்காடுகளை போடாமல் வெளியே செல்கிறார்கள். இதன் மூலமாக சில ஆண்கள் உங்களை பார்த்து தப்பு கணக்கு போடுகிறார்கள். அவருடைய குடும்பத்தை பற்றியும் தவறாக நினைக்கிறார்கள். தன்னுடைய குழந்தைகளை வளர்க்கும் போது ஒழுக்கமான ஆடையை உடுத்தி வளர்க்க வேண்டும்.

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوْ التَّابِعِينَ أَوْ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنْ الرِّجَالِ أَوْ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (24:31)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.

தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன்: 24:31)

 أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَتْ تَقُولُ
لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ أَخَذْنَ أُزْرَهُنَّ فَشَقَّقْنَهَا مِنْ قِبَلِ الْحَوَاشِي فَاخْتَمَرْنَ بِهَا

ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (அல்குர்ஆன்: 24:31) ஆவது வசனம் இறங்கியபோது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டாவாக ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

நூல்: புகாரி-4759 

அலங்காரத்தை வெளிபடுத்த கூடாது

சில பெண்கள் தனது கணவருடன் இருக்கும் போது தங்களை அலங்காரம் செய்து கொள்ள மாட்டார்கள். திருமணம் அல்லது மற்ற விஷேசமான காரியங்களுக்கு தங்களை அழகுக்கு மேல்அழகு படுத்திக்கொண்டு செல்வார்கள். அழங்காரம் எவை? முத்து (சலங்கு) கொலுசு, வளையல், இதை போட்டுகொண்டு வேகமாக நடக்கும் போது இதன் சப்தத்தால் பிறருடைய பார்வை நம்பக்கம் திரும்பும். சப்தமில்லாத கொலுசு, வளையலை அனித்துக்கொள்ளலாம். இப்படி அலங்காரம் செய்பவர்கள் ஷைத்தானுக்கு ஒப்பானவர்கள்.

وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன்: 24:31)

மெல்லிய உடையணிந்து, பிறரைத் தம்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து (கர்வத்தோடு) நடக்க கூடாது

நவீன காலம் என்று சொல்லிக்கொண்டு விதவிதமாக ஆடைகளை பெண்கள் உடுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளே உள்ள ஆடை தெரியும் அளவுக்கு அவர்களுடைய ஆடைளை அணிகிறார்கள். மனிதர்களின் மனதை திசை திருப்ப கூடிய செயல்களை இஸ்லாம் தடைசெய்கிறது. இக்காலத்தில் விபச்சாரம் பெருகியிருப்பதின் காரணம் இது போன்ற ஈனசெயல்களால் தான். விபச்சாரத்தை ஒழிக்க வேண்டுமா? இஸ்லாம் கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். சிறிய வயதிலிருந்து தனது குழந்தைக்கு அழகான ஆடை உடுத்தி அல்லது மெல்லிய ஆடையில்லாமல் அவர்களுடைய உடலை மறைக்கும் அளவுக்கு ஆடை உடுத்தி வளர்க்க வேண்டும். மெல்லிய ஆடையை உடுத்துபவர்கள் சுவனத்திற்கு நுழையமாட்டார்கள்.

صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-4316 

கணவன் வீட்டில் இருந்தால் அனுமதியுடன் நோன்பு வைக்க வேண்டும்

கணவர் உள்ளூரில் இருக்கும் போது அவருடைய அனுமதியில்லாமல் நோன்பு நோற்பது எந்த பெண்களுக்கும் கூடாது. சில பெண்கள் தனது கணவர் மீதுள்ள கோபத்தால் அனுமதியில்லாமல் நோன்பு வைக்கிறார்கள். ஏனென்றால் அவர் படுக்கை அறைக்கு அழைக்கும் போது நான் நோன்பு வைத்துள்ளேன் என்று சொல்கிறார்கள். கணவர் மீதுள்ள கோபத்தால் அவருடைய அனுமதியில்லாமல் நோன்பு வைப்பது கூடாது. இந்த கெட்ட குணங்கள் எந்த பெண்களிடத்தில் இருக்கிறதோ அவர்கள் நல்ல பெண்கள் இல்லை.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
لَا يَحِلُّ لِلْمَرْأَةِ أَنْ تَصُومَ وَزَوْجُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ وَلَا تَأْذَنَ فِي بَيْتِهِ إِلَّا بِإِذْنِهِ وَمَا أَنْفَقَتْ مِنْ نَفَقَةٍ عَنْ غَيْرِ أَمْرِهِ فَإِنَّهُ يُؤَدَّى إِلَيْهِ شَطْرُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரது அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்  அறிவிக்கிறார்கள். புகாரி-5195 

கணவனின் குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்

மனைவி தனது கணவருடைய வீட்டிற்கு பொறுப்பாளியாகிறாள். கணவருடைய சொத்து, அவனுடைய பிள்ளைகள், தாய் தந்தைகளை பேணி பாதுகாக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு மனைவிக்கு உண்டு. குழந்தைக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்பிப்பது மனைவியின் கடமையாகும்.

كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَهِيَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.

பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.

“இவையனைத்தையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்டேன்” என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், “மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்கும் பொறுப்பாளன் ஆவான். அது குறித்தும் அவன் விசாரிக்கப்படுவான். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் (ஏதேனும் ஒரு விஷயத்திற்குப்) பொறுப்பானவர்களே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்றும் கூறியதாக நான் நினைக்கிறேன்.

நூல் : புகாரி-2409 

குழந்தையை சரியான முறையில் வளர்க்க வேண்டும். ஆணுக்கு ஒப்பாக வளர்க்க கூடாது.

குழந்தை வளர்க்கும் போது ஆண்குழந்தையாக இருந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை ஆடை உடுத்துவது, அல்லது பெண் குழந்தையாக இருந்தால் ஆண் குழந்தையின் ஆடை உடுத்துவது இது போன்று வளர்க்க கூடாது. பெண் குழந்தையின் ஆடையை, பெண் குழந்தைக்கும் ஆண் குழந்தையின் ஆடையை, ஆண் குழந்தைக்கும் உடுத்த வேண்டும். உடையிலும் நடையிலும் பேச்சிலும் பழக்க வழக்கத்திலும் ஆண் குழந்தையை ஆண் குழந்தையாகவும், பெண் குழந்தையாக இருந்தால் பெண்குழந்தையாகவும் வளர்க்க வேண்டும். ஏனென்றால் ஆண்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். பெண் வீட்டில் இருப்பதின் காரணத்தினால் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு பெண்களுக்கு உண்டு.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
لَعَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ وَقَالَ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلَانًا وَأَخْرَجَ عُمَرُ فُلَانًا

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், “அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.

நூல் : புகாரி-5886 

மனைவி படுக்கைக்கு வரவில்லையென்றால் சாபம் உண்டாகும்

நமக்கும் நம்முடைய கணவருக்கும் சண்டை நிகழ்ந்துயிருந்தாலும், தனது கணவர் படுக்கை அறைக்கு அழைத்தால் மறுக்க கூடாது. அல்லது நாம் முக்கியமான வேலையில் ஈடுபட்டுயிருக்கும் போது கணவர் படுக்கை அறைக்கு நம்மை அழைத்தால் அந்த வேலையை விட்டு விட்டு கணவருடைய அழைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கணவருடைய அழைப்புக்கு பதில் தராத பெண்களை மலக்குமார்கள் சபிக்கின்றார்கள். யார் முக்கியத்துவம் தரவில்லையோ அவர்கள் நல்ல பெண்மணி கிடையாது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரி-3237 

அல்லாஹ் முடிவு செய்த விஷயத்தில் சுயவிருப்பம் நுழைக்க கூடாது.

பெண்கள் இப்படி தான் வாழவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த காரியங்களை விட்டு விட்டு தனக்கு விருப்பமான வாழ்க்கையை சிலர் தேடிக்கொள்கிறார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த காரியங்களை நாம் சுயவிருப்பம் கொண்டால், கட்டாயமாக நரகத்திற்கு சொந்தகாரனாக மாறிவிடுவோம்.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 33:356)

இது மாதிரி அதிகமான நல்லகாரியங்களை இஸ்லாம் பெண்களுக்கு கூறியிருக்கிறது. அல்லாஹ்வும்  அவனது தூரும் காட்டிதந்த ஒழுக்கத்தை நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். நாம் சுய விருப்பம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.