Tamil Bayan Points

பத்ரு, உஹது படிப்பினை – 7

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

முன்னுரை

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான உஹுத் போர் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம்.

போர் துவக்கம்

நபிகளாரின் படையும் இûவைப்பவர்களின் படை கடுமையாக மோதத்துவங்கியது. சொர்க்கத்தை மட்டும் நோக்கமாக கொண்ட இஸ்லாமிய படை வீரியமாக இணைவைப்பவர்களை தாக்க துவங்கினர்.

உஹுதுப் போரின் போது ஒருவர் நபி (ஸல்) அவர்கüடம், “நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்” என்று பதிலüத்தார்கள். (அந்த மனிதர்) தமது கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்து விட்டு (களத்தில் குதித்து), தான் கொல்லப்படும் வரையில் போரிட்டார்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரி (4046)

அம்பெய்து தாக்கிய ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

உஹுத் போரில் கலந்து கொண்ட ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அம்பெய்து தாக்குவதில் வல்லவர். எனவே அவர்களுக்கு நபிகளார் அம்புகளை எடுத்துக் கொடுத்து எதிரிகளை தாக்கச் சொன்னார்கள்.

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து எனக்காக (அம்புகளை) உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது(என்னிடம்), “அம் பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி),

நூல் : புகாரி (4055)

முஸ்லிம்களின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் இணைவைப்பவர்கள் சிதறி ஓடலானார்கள். பெண்கள் எல்லாம் மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் அவர்களை (களத்தில்) சந்தித்த போது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடி விட்டனர். பெண்களெல்லாம், (தம் கால்கüல் அணிந்திருந்த) கால் தண்டைகள் வெüயில் தெரிய மலையில் ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : பரா (ரலி),

நூல் : புகாரி (4043)

போரின் வெற்றியை திசை திருப்பிய சம்பவம்

உஹுத் மலை கணவாயில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர் களின் தலைமையில் அம்பெய்யும் குழுவினர். இணைவைப்பவர்கள் ஓட்டம் பிடித்ததைப் பார்த்து கீழே இறங்கி வர துவங்கினர். அதன் தலைவரான அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் தடுத்தும்

அவர்கள் கேட்காமல் கீழே செல்ல துவங்கினர்.

தங்கள் இடத்தை காலி செய்து விட்டதை கண்ட காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், தன் தலைமையில் குதிரைப்படையினருடன் அந்த கணவாய் வழியாக முஸ்லிம்களை தாக்க துவங்கினர். இதை எதிர்பார்க்காத முஸ்லிம்கள் சிதறிப்போனார்கள்.

இணைவைப்போரை அன்றைய (உஹுதுப் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி (ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு

அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து, “(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்” என்று கூறினார்கள். நாங்கள் அவர்களை (களத்தில்) சந்தித்த போது

அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடி விட்டனர். பெண்களெல்லாம், (தம் கால்கüல் அணிந்திருந்த) கால் தண்டைகள் வெüயில் தெரிய மலையில் ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது (அம் பெய்யும் குழுவினரான) அவர்கள், “(நமக்கே வெற்றி!) போர்ச்செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம், வாருங்கள்)” என்று கூறலாயினர். அப் போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), “என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “இந்த இடத்தை விட்டும் (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள்’ என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். (எனவே,

போர்ச்செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நகர வேண்டாம்) என்று சொன்னார்கள். ஆனால் சகாக்கள் ஏற்க மறுத்துவிவிட்டனர். அவர்கள் மறுத்து விடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்கüல்) எழுபது பேர் கொல்லப்

பட்டனர்.

அறிவிப்பவர் : பரா (ரலி),

நூல் : புகாரி (4043)

கர்ஜித்த அபூஸுஃப்யான் (ரலி)

பின்வழியாக இணைவைப்பவர்கள் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன முஸ்லிம்களை போர்களத்தில் சந்தித்த அபூஸுஃப்யான் (ரலி) (அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை), இது பத்ரு போருக்கு பழிக்கு பழி வாங்குதலாகும் என்று கர்ஜித்தார்.

(அப்போது எதிரணித் தலைவர்) அபூசுஃப்யான் முன்வந்து “(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கின்றாரா?” என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு பதிலüக்க வேண்டாம்” என்று (தம் தோழர்கüடம்) கூறினார்கள். மீண்டும், (உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கேட்டார்.

அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு நீங்கள் பதில் தர வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். பிறகு, “கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று கேட்டு விட்டு (பிறகு தம் தோழர்கüன் பக்கம் திரும்பி) “இவர்களெல்லாம் கொல்லப்பட்டு விட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலüத்திருப்பார்கள்” என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், “தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்கு கவலை தரும் செய்தியைத் தான் உனக்காக

அல்லாஹ் வைத்துள்ளான்” என்று பதிலடி கொடுத்தார்கள். அதற்கு அபூ சுஃப்யான், “(கடவுள்) ஹுபலே! உன் கட்சி மேலோங்கி விட்டது.” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு பதிலüயுங்கள்” என்று கூறினார்கள். “(அல்லாஹ்வின் தூதரே) நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று மக்கள் கேட்டனர். “அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மகத்துவ மிக்கவன்” என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது.) அபூ சுஃப்யான், “எங்களுக்குத் தான் “உஸ்ஸா’ (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்கüடம் “உஸ்ஸா’ இல்லையே” என்று கூறினார்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எங்கüன் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியொரு) உதவியாளன் இல்லையே!” என்று சொல்லுங்கள் என்று பதிலüத்தார்கள். (அவ்வாறே முஸ்லிம்கள் பதிலளித்தனர்.) “இந்த(உஹுதுடைய)நாள், பத்ருப்போர் (நடந்த) நாளுக்கு பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி மாறித் தான் இறைக்க முடியும். (உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாது” என்று அபூசுஃப்யான் கூறினார்.

அறிவிப்பவர் : பரா (ரலி), நூல் : புகாரி (4043)

தாக்கப்பட்ட நபிகளார்

முஸ்லிம்கள் சிதறிய போது நபிகளார் அவர்களை அழைத்து

அவர்களை ஒன்றிணைக்கும் வேலை செய்தார்கள். நபிகளாரை பாதுகாக்கும் பணியில் பல நபித்தோழர்கள் இருந்தாலும் அவர்களும் தாக்கப்பட்டு நபிகளாரும் இரத்தம் வெளிப்படும் வகையில் தாக்கினர்.

நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கüன் செயலிழந்து போன கையைப் பார்த்தேன். உஹுத் நாüல் அந்தக் கையால் நபி (ஸல்) அவர்களை அன்னார் காத்த(போது எதிரிகளால் வெட்டப்பட்ட)ôர்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அபீஹாஸிம், நூல் : புகாரி (4063)

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று விற்களை உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்)

அவர்கள், “அதை அபூதல்ஹாவிடம் போடு” என்று சொல்வார்கள்.

அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகüன் அம்புகüல் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),நூல் : புகாரி (4064)

“அல்லாஹ்வின் பாதையில் நபி (ஸல்) அவர்கள் எவனைக் கொன்று விட்டார்களோ அவன் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது. (மேலும்,) நபி (ஸல்) அவர்கüன் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது”

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் :புகாரி (4074)

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கüடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுதுப் போரின் போது) ஏற்பட்ட காயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் காயத்தைக் கழுவி விட்டவரையும், (கழுவுவதற்காகத்) தண்ணீரை ஊற்றிவிட்டுக் கொண்டிருந்தவரையும், மருந்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு விளக்கிச்) சொன்னார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்தக் காயத்தைக் கழுவிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (தமது) கேடயத்தில் (தண்ணீர் நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதையே கண்டபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாயின் ஒரு பகுதியை எடுத்து வந்து (சாம்பலாகும் வரை) அதைக் கரித்து, அதனைக் காயத்தின் மீது அழுத்தி வைத் தார்கள். இரத்தம் (வருவது) நின்றுவிட்டது. அன்றைய (உஹுதுப் போர்) தினத்தில் நபி (ஸல்) அவர்கüன் கீழ்ப்பல் உடைக்கப்பட்டது. மேலும்

அவர்களது முகம் காயப் படுத்தப்பட்டது. மேலும் (அவர்களது) தலைக் கவசம் அவர்களுடைய தலையின் மீதே வைத்து நொறுக்கப்பட்டது.

அறிவிப்பவர் : அபூஹாஸிம் சலமா பின் தீனார், நூல் : புகாரி (4075)

சிதைக்கப்பட்ட உடல்கள்

போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களை, வெறிபிடித்த இணைவைப்பாளர்கள் உடல்களை குத்தி, குதறி, சிதைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

(உங்கள் தோழர்கüல்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத்

துன்பத்தையüக்கவும் செய்யாது” என்று அபூசுஃப்யான் கூறினார்.

அறிவிப்பவர் : பரா (ரலி),

நூல் : புகாரி (4043)

கொல்லப்பட்ட நபித்தோழர்கள்

இப்போர்களத்தில் சுமார் எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர்.

பலர் காயமடைந்தனர்.

பெண்களெல்லாம், (தம் கால்கüல் அணிந்திருந்த) கால் தண்டைகள் வெüயில் தெரிய மலையில் ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள், “(நமக்கே வெற்றி!) போர்ச்செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம், வாருங்கள்)” என்று கூறலாயினர். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), “என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “இந்த இடத்தை விட்டும் (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள்’ என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். (எனவே, போர்ச்செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நகர வேண்டாம்) என்று சொன்னார்கள். ஆனால் சகாக்கள் ஏற்க மறுத்துவிவிட்டனர். அவர்கள் மறுத்து விடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்கüல்) எழுபது பேர் கொல்லப்பட்டனர்.

அறிவிப்பவர் : பரா (ரலி),

நூல் : புகாரி (4043)

காயம்பட்டோர்களுக்கு உதவிய நபித்தோழியர்கள்

உஹுத் போர்களத்தில் காயம்பட்ட நபித்தோழர்களுக்கு மருத்துவம் செய்வது, தண்ணீர் கொடுப்பது, அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வது போன்ற தங்களால் ஆன உதவிகளை நபித்தோழியர்கள் செய்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கüன் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்ற வர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தங்கள் முதுகுகüல் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்கüன் வாய்கüல் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று,

அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்கüல் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகளை நான் கண்டேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி (4064)

மதீனாவாசிகளான பெண்கüல் சிலரிடையே உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பü ஆடைகளை) பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், “இறைநம்பிக்கையாளர்கüன் தலைவரே! இதனைத்

தங்கüடமிருக்கும் (தங்கüன் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் (மகüன்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினர்.லிஅலீ (ரலி) அவர்கüன் மகளான உம்மு குல்ஸூம் (ரலி)

அவர்களைக் கருத்தில் கொண்டே (இப்படிக்) கூறினர்லி அப்போது உமர் (ரலி) அவர்கள், “உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்கüல் ஒருவராவார்.” என்று கூறினார்கள். (மேலும்) “அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த நாüல் தோலினால் ஆன தண்ணீர்ப் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்” என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅலபா பின் அபீ மாலிக் (ரலி),

நூல் : புகாரி (4071)

முஸ்அப் பின் உமைர் (ரலி)

உஹுத் போரில் கொல்லப்பட்ட நபித்தோழர்களில் ஒருவர் முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆவார்.

நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரில் முடிந்த போது முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்து சென்றார்கள். அப்போது அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதி மொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். என்ற (33:23) வசனத்தை நபிகளார் ஓதினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி),

நூல் :ஹாகிம், பாகம் :4, பக்கம் :319

அனஸ் பின் நள்ர் (ரலி)

மிக கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபித்தோழர்களில் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்களும் ஒருவர்.

என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் நள்ர்லிரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), “(இணை வைப்பவர்களுடன்) நபி (ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெற வைத்திருந் தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த்திருப்பான்” என்று சொன்னார்.

அவர் உஹுதுப் போரைச் சந்தித்தார். (அதில் கலந்து கொண்டார். அந்தப் போரில்) மக்கள் தோல்வியுற்றனர். அப்போது அவர், “இறைவா! இந்த முஸ்லிம்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு (போர்க்களத்தில்) தமது வாளுடன் முன்னேறிச் சென்றார். அப்போது (எதிரில் வந்த) சஅத் பின் முஆத் (ரலி)

அவர்களைச் சந்தித்து, “சஅதே! எங்கே (செல்கிறீர்கள்)? உஹுத் மலைக்கு அருகிலிருந்து நான் சொர்க்கத்தின் சுகந்தத்தைக் காண்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். பிறகு, (உடல் முழுதும் சிதைந்து போனதால்)

அடையாளம் அறியப்படாத நிலைமையில் கொல்லப்பட்டார். அவரை அவருடைய சகோதரி மச்சத்தை வைத்தோ… அல்லது அவருடைய கை விரல் நுனிகளை வைத்தோ… அடையாளம் கண்டு கொண்டார். அவரது உடலில் (வாளால்) வெட்டப்பட்டும், (ஈட்டியால்) குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன

நபிகளார் தாக்கப்படுதல், ஹம்ஸா கொல்லப் படுதல்  பல முக்கியமான  செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்!