Tamil Bayan Points

18) நோயாளியை விசாரிக்கச் சென்றால்

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 28, 2022 by Trichy Farook

நோயாளியை விசாரிக்கச் சென்றால்

اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி முத்ஹிபல் ப(B]ஃஸி இஷ்பி[F] அன்தஷ் ஷாபீ[F] லா ஷாபி[F]ய இல்லா அன்(த்)த ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.

இதன் பொருள் :

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி-5742 

அல்லது

اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி அத்ஹிபில் ப(B]ஃஸ இஷ்பி[F]ஹி வஅன்தஷ் ஷாபீ[F] லாஷிபா[F]அ இல்லா ஷிபா[F]வு(க்)க ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!

ஆதாரம்: புகாரி-6743

அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து

بِاسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்

என்று மூன்று தடவை கூறி விட்டு

 أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

அவூது பி(B]ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு

என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

இதன் பொருள் :

நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம்-4430 (4082)

அல்லது

لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ

லா ப(B]ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

இதன் பொருள் :

கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்

எனக் கூறலாம்.

ஆதாரம்: புகாரி-3616