Tamil Bayan Points

34) தொழுகையைத் துவக்கிய உடன்

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 29, 2022 by Trichy Farook

தொழுகையைத் துவக்கிய உடன்

அல்லாஹு அக்பர் என்று கூறி தொழுகையில் நுழைந்த உடன் அல்ஹம்து அத்தியாயம் ஓதுவதற்கு முன் கீழ்க் காணும் துஆவை ஓத வேண்டும்.

اَللّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اَللّهُمَّ نَقِّنِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ اَللّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

அல்லாஹும்ம பா(B]யித் பைனீ வபைன கதாயாய கமா பா(B]அத்த பை(B]னல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிபி[B], அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்பு[B]ல் அப்[B]யளு மினத் தனஸி அல்லாஹும்மஃக்ஸில் ஃகதாயாய பி[B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல் ப[B]ரதி

இதன் பொருள் :

இறைவா! கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியைப் போல் எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் செய்யப்படுவது போல் என்னைப் பாவங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்களைக் கழுவுவாயாக.

ஆதாரம்: புகாரி-744 

அல்லது

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِيْنَ إِنَّ صَلاَتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ للهِ رَبِّ الْعَالَمِيْنَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِيْنَ اَللّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبّيْ وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِيْ وَاعْتَرَفْتُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ ذُنُوبِيْ جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِيْ لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِيْ لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنّيْ سَيّئَهَا لاَ يَصْرِفُ عَنِّيْ سَيّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِيْ يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

வஜ்ஜஹ்(த்)து வஜ்ஹிய லில்லதீ ப[F](த்)தரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனீப[F]ன் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலா(த்)தீ, வநுஸு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பி[B]ல் ஆலமீன். லாஷ்ரீ(க்)க லஹு வபி[B]தாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்(த்)த ரப்பீ[B] வஅன அப்[B]து(க்)க ளலம்து நப்[F]ஸீ வஃதரப்[F](த்)து பிதன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீ துனூபீ[B] ஜமீஅன், இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லாயஹ்தீ லி அஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த வஸ்ரிஃப் அன்னீ ஸைய்யிஅஹா லா யஸ்ரிப்[F] அன்னீ ஸைய்யிஅஹா இல்லா அன்(த்)த லப்பை[B](க்)க வஸஃதை(க்)க வல் கைரு குல்லுஹு பீ[F] யதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி[B](க்)க வஇலை(க்)க தபா[B]ரக்த வதஆலை(த்)த அஸ்தஃக்பி[F]ரு(க்)க வஅதூபு[B] இலை(க்)க.

இதன் பொருள் :

வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்பி விட்டேன். கொள்கையில் உறுதி கொண்டவனாகவும், இணை கற்பிக்காதவனாகவும் இருக்கிறேன். எனது தொழுகை, எனது வணக்கங்கள், எனது வாழ்வு, எனது மரணம் அனைத்தும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். நான் கட்டுப்பட்டு நடப்பவர்களில் ஒருவன். இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என் அதிபதி. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டேன்.

எனவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்கவோ, அழகிய குணங்களின் பால் வழிகாட்டவோ முடியாது. கெட்ட குணங்களை என்னை விட்டும் அகற்றி விடு! உன்னைத் தவிர யாரும் அதனை அகற்ற முடியாது. இதோ வந்து விட்டேன். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளது. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னைக் கொண்டே உதவி தேடுகிறேன். உன்னளவில் திரும்புகிறேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்டு உன்னளவில் திரும்புகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம்-1419 (1290)